Breaking News

விசா வைத்திருக்கும் அனைவர்க்கும் கூடுதல் 10 மில்லியன் doses Pfizer jab வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு !

prime minister scott morrison

ஆஸ்திரேலிய அரசாங்கம் 10 மில்லியன் கூடுதல் அளவிலான Pfizer Jab-ஐ பயன்படுத்தி அனைத்து விசா வைத்திருக்கும் மக்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை வழங்க உள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து விசா வைத்திருக்கும் மக்களும் கொரோனா வைரஸ் இலவச தடுப்பூசியை பெறுவார்கள்.

10 million additional doses of Pfizer jab to all visa holdersமத்திய அரசு கூடுதலாக 10 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் Jab-ஐ பெற்றுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் இலவச தடுப்பூசிக்கு பெரும்பாலான விசா வைத்திருப்பவர்கள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தனர். ஆனால் சில விசாக்களில் 69,000 பேர் முன்பு விலக்கப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சர் Greg Hunt இது குறித்து கூறியதாவது, தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது, மேலும் ஆஸ்திரேலிய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுள்ளது, மிகச்சிறந்த ஒன்று என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.ஆஸ்திரேலியாவில் விசாக்கள் ரத்து செய்யப்பட்ட மக்கள் உட்பட தற்போது தடுப்புக்காவலில் வசிக்கும் மக்கள் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெறுவார்கள்.

தேசிய CALD, தடுப்பூசி பிரச்சாரத்தில் ரேடியோ மற்றும் விளக்கமளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் 32 மொழிகளில் விளம்பரமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 10 மில்லியன் Pfizer அளவுகளை ஆஸ்திரேலியா பெறுகிறது:

Prime Minister Scott Morrison ஆஸ்திரேலியா கூடுதலாக 10 மில்லியன் Pfizer தடுப்பூசியை பெற்றுள்ளதாக அறிவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு மூன்று தடுப்பூசிகள் வெளியிடும் நிலையில் நாங்கள் செயல்பட்டு இருக்கிறோம் எனவும் கூறினார். இந்த மூன்று தடுப்பூசிகளும் இப்போது Covid-19 நோயைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

திரு Hunt பிப்ரவரி கடைசியில் வரும் Pfizer மற்றும் மார்ச் மாத ஆரம்பத்தில் வரவுள்ள Astrazeneca ஆகியவற்றை கொண்டுள்ளது எனவும் ஆஸ்திரேலியா தற்போது 150 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுள்ளது எனவும் கூறினார்.