Breaking News

ஹோட்டலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்த அனைவருக்கும் புது வித கொரோனா ஏதும் இல்லை !

test result negative for everyone near the corona victims at the hotel quarantine

பாதிக்கப்பட்ட மெல்பர்ன் ஹோட்டல் ஊழியரின் இரண்டு குடும்ப தொடர்புடையவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது . மாநிலமுதல்வர் Daniel Andrews கூறுகையில், இது ஆரம்ப கட்டம் தான். ஆனால் இந்த இரண்டு சோதனைகளும் சாதகமாக உள்ளது. மேலும் அதிகமான சோதனை தளங்கள் அமைக்கப்படும் என்றார்.

Victorian Deputy Chief Health Officer Allen ChengVictorian Deputy Chief Health Officer Allen Cheng கூறுகையில், இது ராக்கெட் அறிவியல் கிடையாது. அவர் ஹோட்டலின் தனிமைப்படுத்தலின் போது தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. Andrews, ஹோட்டல் நெறிமுறைகளை மீறவில்லை. பாதிக்கப்பட்டவர் ஒரு ஊழியர் என்றார்.

மெல்பர்னின் கொரோனா தொற்று பயத்தின் காரணமாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளும் , 520 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். நான்கு நாட்களில் தொடங்கவிருந்த அனைத்து ஆட்டங்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த 600 பேரும் தனிமைப்படுத்தவும், சோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஹோட்டல் ஊழியரின் தொற்றுக்கு பிறகு அனைத்து விக்டோரியர்களும் மீண்டும் முகக்கவசம் அணியவும், கூட்டமான இடங்களில் செல்வதை குறைத்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டனர். 26 வயதான நபர் ஒருவர் தொற்று உறுதியவதற்கு முன்பு பல பொது பகுதிகளையும், கடைகளையும் பார்வையிட்டுள்ளார். அந்த நபர் resident support worker ஆக Melbourne’s Grand Hyattல் பணிபுரிந்தார். அங்கு தான் டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் தனிமையில் இருந்தனர்.

விக்டோரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் Michael O’Brien கூறுகையில், அரசு இரண்டு நாட்களில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடங்குமா? மேலும் இதனை தொடர்வது பாதுகாப்பானதாக இருக்குமா? என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும்.

வைரஸ் அதிகம் பரவக்கூடிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 இடங்களில் ஒரு சூப்பர் மார்க்கெட், ஒரு ஹோட்டல் உள்ளதாக Department of Health and Human Services தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

பல ஹோட்டலில் தனிமை படுத்தப்பட்ட காவலர்கள் Covid – 19 .ஆல் தொற்று ஏற்பட்டவர்கள். விக்டோரியாவின் இரண்டாவது கொரோனா பரவலை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதற்கும், பல மாதங்கள் ஊரடங்கிற்கும் காரணம். சுகாதார அதிகாரிகள் மனித வைரஸின் தோற்றத்தை உறுதிப்படுத்தும் மரபணு சோதனையின் முடிவுக்காக காத்திருந்தனர்.

புதன்கிழமை Health அதிகாரிகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த ஒரு நபருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் Melbourne’s Park Royal ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நபருக்கும் ஆபத்தான Uk மாறுபடும் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 100 ஹோட்டல் ஊழியர்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 37 நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. வியாழக்கிழமை NSW, Melbourn-லிருந்து வரும் பயணிகளை சோதனையிட அறிவித்தது. இதற்கிடையில் Greater Melbourn-லிருந்து மக்களுக்கு சோதனை செய்ய SA கூறியது.

மாநில முதல்வர் Steven Marshall அந்த மக்கள் 1, 5 மற்றும் 12 நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும். சோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்று வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மக்கள் யார் யாரெல்லாம் ஜனவரி 28ஆம் தேதி வரை Grand Hyatt ஹோட்டலில் இருந்த மக்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வைக்கப்படுவார்கள். மெல்பர்னில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றியிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.