Breaking News

விக்டோரியன் அரசாங்கம் தொடர்பு தடமறிதல் முறையை சரிசெய்ய தயக்கம் காட்டுகிறது !

விக்டோரியாவின் contact tracing regime விசாரணையில், தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ள மாநில அரசு தயக்கம் காட்டியது என்று கூறப்படுகின்றது .சட்டமன்ற கவுன்சில் குழுவின் கடுமையான மதிப்பீடு திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 260 பக்க அறிக்கையில் இவ்வாறு வெளிவந்துள்ளது.

தவறுகளை ஒப்புக்கொள்ள அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் ,அதனால் தற்போதைய தொடர்புத் தீர்வு எவ்வளவு திறமையானதாக இருந்தாலும் , விக்டோரிய மக்களுக்கு இது தேவைப்படும்போது கிடைக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.இந்த தோல்வி பல உயிர்களை இழந்துள்ளதாகவும் ,அதனால் தான் முழு ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இந்த பிரச்னையை சரி செய்ய முடியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Reason Party MP Fiona Patten தலைமையிலான குழு,இது குறித்து கூறுகையில் , கூடுதல் தொடர்பு கண்காணிப்பு ஊழியர்களின் தேவையை அடையாளம் காட்டிய அறிக்கைகளில்,விக்டோரியன் அரசாங்கம் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றனர் .

தொடர்பு கண்காணிப்பு குழுவிற்கான பணியாளர்களை 14 பொது சுகாதார அதிகாரிகளிடமிருந்து 24-ஆக ,ஆறு மாதங்களுக்கு உயர்த்துமாறு பரிந்துரைத்ததாக முன்னாள் சுகாதார மற்றும் மனித சேவைகள் பிரிவு manager Tom Voigt கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் பிரச்சனையை கையாள அரசாங்கம் தயக்கம் காட்டியதாக,பங்குதாரர்கள் கூறியுள்ளனர் .அதனால் பல நெருக்கடிக்கு உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த மாதம் விசாரணைக்கு முன் வெளிவந்த ஆதாரங்களில் ,பலவும் பொய்யாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் என்றும் Australia’s chief scientist Alan Finkel குற்றம் சாட்டினார்.அதன் பிறகு ,இது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Salesforce தயாரிப்பு மூலம்
விக்டோரியா டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அமைப்புக்கு மாறியது என்றும் கூறியுள்ளனர்.

இதன் மூலம் ,48 மணி நேரமும் முக்கிய தொடர்புகளை அடையாளம் காணவும், அதனை தொடர்பு கொள்ளவும் இந்த சேவை விக்டோரியாவை மேம்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்று அக்குழு கூறியது.இந்த software முதன்முதலில் மார்ச் 24 அன்று அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட தொடர்பு தடமறிதல் (contact tracing )இப்போது ஒரு நாளைக்கு 15,000 சோதனை முடிவுகளை சமாளிக்க முடிவதாக Ms Patten கூறியுள்ளார் .எதிர்காலத்தில் விக்டோரியா இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமானால், நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.