Breaking News

தஞ்சம் புகுந்தோரின் நிச்சயமற்ற எதிர்காலத்தை பற்றிய கவலை அதிகரிப்பு !

MELBOURNE -ல் உள்ள Mantra Bell City தங்கும் விடுதி , தற்போது நீக்கப்பட்ட Medevac சட்டத்தின்கீழ் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்தவர்களின் தற்காலிக தடுப்புக்காவல் மையமாக உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த தங்கும் விடுதியுடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், இவர்கள் வேறு ஒரு தெரியாத இடத்திற்கு மாற்றப்பட இருப்பதாக, கடந்த திங்களன்று தகவல் வந்தது. இதனால் அவர்களின் எதிர்காலம் பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள்.

இந்த அறிவிப்பு வெளிவந்த நேரம் மிகவும் துரதிஷ்டவசமானது என சில வழக்கறிஞர்கள் இதை விவரிக்கின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்ட ரீதியாக கோரிக்கை விடப்பட்டதால், கடந்த வாரம் , சில தஞ்சம் புகுந்தவர்களுக்கு Visa வழங்கப்பட்டு, இந்த தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

Mantra Hotel – உடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடியப் போகிறது என முன்னரே Department of Home Affairs-க்கு தெரியும் மற்றும் கடந்த வார நிகழ்வுகள் இந்த தஞ்சம் புகுந்தோரின் மனதில், தாங்கள் விடுதலை செய்யப்பட போகிறோம் என்ற ஒரு மன தைரியத்தை கொடுத்தது என Allinson Battinsson ,Director Principal of Human Rights for All கருத்து தெரிவித்துள்ளார் . அவர்களிடம் நீங்கள் வேறு ஒரு இடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்படபோறீர்கள் என்று கூறுவதைவிட, இந்த சட்டத்தின்படி விரைவில் இவர்களை விடுவிப்பதே ஒரு சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

மறுபடியும் இடம் தெரியாத ஒரு இடத்தில் தடுப்புக்காவல் வைக்கப்பட போகிறோம் என்ற அந்த தகவல் இவர்கள் மன ஆரோக்கியத்தில், மோசமான விளைவுகளை உண்டாக்க கூடும். இவர்களிடம் இருந்து அதிகாலை 2 மணி அல்லது 4 மணி அளவில், சில மனக்கலக்கமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அல்லது Christmas Island -ல் ஏதோ ஒரு இடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட போகிறோமா அல்லது தாங்கள் துன்பங்கள் அனுபவித்த தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்ட போகிறோமா என தெரியாதது தான் மிக சோகமான ஒரு விஷயமாகும்.

ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நாளான கடந்த செவ்வாயன்று Mantra Hotel-க்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்தனர். 7 ஆண்டுக்கு மேல் தடுப்புக்காவலில் உள்ள இந்த நபர்களின் மன ஆரோக்கியத்தை மேலும் சிதைக்கும் விதமாக, இந்த தடுப்புக்காவல் இடமாற்றம் உள்ளதாக தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார். Medevac சட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்காக இந்த அகதிகள் இங்கு கொண்டுவரப்பட்டனர் என்றும், அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், அவர்களை காற்றுப்புகா இடங்களில் அடைத்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Melbourne-ல் ஒரு புது இடத்தில் இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட இருக்கின்றனர் எனவும், இதைப்பற்றி பிற தகவல் மற்றும் இடமாற்றம் செய்யப்படும் நேரம், சில பாதுகாப்பு காரணங்களுக்காக கூற முடியாது என்றும் Department of Home Affairs Spokesperson தெரிவித்தார். Manus தீவு மற்றும் Nauru -ல் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா வந்தவர்களில், 180க்கும் மேற்பட்ட தஞ்சம் புகுந்தோர் மற்றும் அகதிகள், Brisbane மற்றும் Melbourne உள்ள விடுதிகளில் தற்சமயம் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடியேற்ற கொள்கையின் கீழ், படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வர முயற்சித்தவர்கள் இங்கே நிரந்தரமாக தங்க அனுமதி இல்லை என்பதாகும். தற்காலிகமாக குடியேறிய மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு மீண்டும் திரும்ப, அவர்கள் அவர்களின் மருத்துவ சிகிச்சையை பற்றி இறுதி முடிவு எடுக்க ஊக்கப்படுத்த படுகிறார்கள் என்று Department of Home Affairs Spokesperson தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசு கொள்கையின் படி, Regional Processing Arrangements -ன் கீழ், ஆஸ்திரேலியாவில் யாரும் தங்க வைக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்