Breaking News

அடுத்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுடன் பயணத்தை திறக்க நியூசிலாந்து ஒப்புக்கொண்டது !

அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கும் இடையேயான போக்குவரத்து தனிமைப்படுத்தப்படாமல் தொடங்கும் என்று நியூசிலாந்து Prime Minister Jacinda Ardern கூறியுள்ளார்.

கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வருவதால் நியூசிலாந்து அரசும் ஆஸ்திரேலிய அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு அடுத்த வருடம் சரியான தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

தலைமை மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைப்படி நியூசிலாந்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் பாதுகாப்பாக வரக்கூடிய ஒருவழியாக இது இருக்குமென்றும், இதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும் Health Minister Greg Hunt கூறினார்.

இந்த போக்குவரத்துக்கு தொடக்கத்தின் மூலம் நண்பர்கள், குடும்பத்தினர், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், பிறப்புகள், விடுமுறைகள், வணிகம், தனிமைப்படுத்தப்படாமல் சர்வதேச இயல்புநிலைக்கு திரும்புவதற்கான முதல் படி என்று கூறியுள்ளனர்.

மோரிசன் அரசாங்கம் ஏற்கனவே நியூசிலாந்திலிருந்து பயணிகளை தனிமைப்படுத்தாமல் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து முடிவினால் ,ஊழியர்களை தொழில் வாரியாகப் பிரிப்பதும், பல திட்டங்களை நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வது போன்ற பல விஷயங்களை பரிசீலனை செய்ய வேண்டும் என்று Ms Ardern குறிப்பிட்டுள்ளார் .

நாட்டின் கொரோனா response minister Chris Hipkins இது குறித்து கூறுகையில் ,விமானங்களுக்கு ஒரு அறிவிப்பு காலம் தேவை என்றும், வெவ்வேறு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்களை பிரித்து வைத்தல் அவசியம் என்றும் கூறினார்.பாதுகாப்பான நாட்டிலிருந்து வரும் எங்கள் பயணிகள் பல பயணிகளுடன் கலப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

நியூசிலாந்தின் இந்த முடிவிற்காக Ms Ardern தனது பாராட்டை தெரிவித்தார்.கொரோனா இல்லாத குக் தீவுகளுடன் பயணத்தை தொடங்க நியூசிலாந்து ஒப்புக் கொண்டுள்ளது.ஆஸ்திரேலியாவிற்கு பயணத்தை தொடங்குவதற்கு முன்பு நியூஸிலாந்துடன் ஒருவழி பயணம் தொடங்கும் என்று Ms Ardern கூறியுள்ளார் .