Breaking News

குயின்ஸ்லாந்து ,சிட்னிக்கான எல்லை அடுத்த வாரம் முதல் திறப்பு !

குயின்ஸ்லாந்து சிட்னிக்கான எல்லை டிசம்பர் 1 முதல் திறக்கப்படும் என்று Premier Annastacia Palaszczuk கூறியுள்ளார் .NSW மக்களை டிசம்பர் முதல் குயின்ஸ்லாந்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

குயின்ஸ்லாந்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து இருப்பதால் ,குயின்ஸ்லாந்திற்கு செல்வது நல்லது என்றும் , சுற்றுலாத்துறை தொடர்ந்து செழித்து வளர்வதைக் காண நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.விக்டோரியாவிற்கு எல்லையை எப்போது திறப்பது என்பது குறித்து குயின்ஸ்லாந்து அதிகாரிகள் புதன்கிழமை முடிவெடுப்பார்கள் .

பாதிப்பு படிப்படியாக குறைந்தால் குயின்ஸ்லாந்து, டிசம்பர் 1 முதல் விக்டோரியாவிற்கும் எல்லைகள் திறக்கப்படும் என்று Ms Palaszczuk நம்பிக்கை தெரிவித்தார் .கிறிஸ்துமஸுக்கு முன் எல்லைகளை திறப்பது நல்ல முடிவு என்றும்,அதே சமயம் மக்கள் அனைவரும் தங்களது சுகாதாரத்தை மனதில் கொண்டு செயல் படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் .முகக்கவசம் அணிவதும் ,சமூகஇடைவேளையை கடைபிடிப்பது கட்டாயம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு இருந்துகொண்டே இருப்பதால் ,அங்கு எல்லைகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று Chief health officer Jeannette Young தெரிவித்துள்ளார்.இருந்தாலும் குறைவான தொற்று பதிவாகி வருவதால் பாதிக்கப்பட்டவர்களை பெரிய அளவில் பாதுகாத்து வருகிறோம் என்று அவர் கூறினார் .

குயின்ஸ்லாந்து எல்லையைத் திறப்பது குறித்து எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை என்று NSW Premier Gladys Berejiklian கூறியுள்ளார் .