Breaking News

கொரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் பொழுது தன்னைத் தனிமைப்படுத்தத் தவறிவிட்டதாக Gladys Berejiklian ஒப்புக்கொண்டார்!

Budget நாலன்று, என் குரலில் பிரச்சனை ஏற்பட்டது, ஆனால் எனக்குத் தொண்டை புண்ணோ வேறு அறிகுறிகளோ இல்லை, எனினும் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் COVID-19 பரிசோதனையை மேற்கொண்டேன் அதன் முடிவுகள் 90 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்துக்குள் கிடக்கும் என்றும் கூறினார்கள் . இருப்பினும் நான் எனது schedule-களை மாற்றாமல் எனது வேலைகளைச் செய்தேன் என்று Gladys Berejiklian கூறினார்.

மேலும் பரிசோதனையின் முடிவுகள் negative என்று வந்தது. ஒரு திட்டமிடப்பட்ட கூட்டம் இல்லையென்றாலும், மக்கள் எப்போதும் போலவே வருவதும் போவதுமாக இருந்தார்கள். நான் மக்களுக்கு மிக அருகிலிருந்தேன் என்று நான் நினைக்கிறன் , ஆனால் எப்போதும் போலவே சமூக இடைவெளி கடைப்பிடித்தேன், என் தொண்டையில் மட்டுமே எனக்குப் பிரச்சனை என்று எனக்கு நன்கு தெரியும் என்றும் NSW Premier Gladys Berejiklian தெரிவித்தார்.

Negative என்று முடிவு கிடைக்கும் வரை COVID-19 சோதனைக்கு உட்பட்ட அனைவரும் சுயமாகத் தனிமைப் படுத்திக்கொல்ல வேண்டும் என்று NSW சுகாதார வழிகாட்டுதல்கள் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் COVID -19 சோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தபோது,திருமதி Gladys Berejiklian சக ஊழியர்களுடனான சந்திப்புகளில் கலந்து கொண்டார் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் Premier-க்கு COVID-19 அறிகுறிகள் இல்லை, எனவே அவர்களுக்குச் சோதனை தேவையில்லை. Premier தனது குரலை இழக்கத் தொடங்கியவுடன்,அவர் ஒரு முன்னெச்சரிக்கை பரிசோதனையை மேற்கொண்டார். அதன் முடிவுகள் negative என்று 2 மணி நேரத்தில் கிடைத்தது என்று premier-ரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைக்கு மேல் Premier இல்லை. சோதனைக்கு உட்படுத்தப் பட்ட ஒவ்வொருவரும் negative என்று முடிவைப் பெறும் வரை சுயமாகத் தனிமைப்படுத்த வேண்டும். இதுவே மற்றொரு ஊரடங்கு உத்தரவைத் தவிர்க்கும் வழி. Premier-க்கு கடந்த வாரத்திலிருந்து தொண்டை தெளிவாக இல்லை என்பதும் அது COVID – 19 இன் அறிகுறி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருப்பினும் Premier தனது சொந்த சுகாதாரத் துறையின் ஆலோசனையைப் பின்பற்றினார் என்பதில் சந்தேகமில்லை என்று எதிர்க்கட்சி சுகாதார செய்தித் தொடர்பாளர் Ryan Park தெரிவித்துள்ளார்.