Breaking News

பாலத்தில் கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே பெண் பலி !

இறந்த அந்தப்பெண்ணின் குடும்பத்தாரும், நண்பர்களும் தங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், அஞ்சலியையும் சமூக ஊடகத்தில் கூறியுள்ளனர். இறந்தவர் Kirsty Spry என்றும் அவருக்கு வயது 40 என்பதும் தெரியவந்துள்ளது . இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.சமூக ஊடகத்தில் இறந்த அப்பெண்ணை அழகான பெண், அழகான தேவதை என்றும், இன்னும் அவர் இறந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

women dies in accident Truck into car on bridgeபிரிஸ்பனுக்கு வடக்கே 220 கி.மீ. தொலைவிலும், Maryborough விலிருந்து 45 கி.மீ. உள்நாட்டிலும் Brooweena உள்ள பாலத்திலிருந்து இறங்கும்போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது. நேற்று மதியம் 2.20 மணியளவில் பாலத்திலிருந்து விழுந்த BMW காரிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்.

ஆபத்தான நிலையில் அவர் Sunshine Coast பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக Queensland Ambulance சேவை தெரிவித்தது. ஆனால் அவர் மிக மோசமாக காயமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது .அந்த truckன் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக துணை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.