Breaking News

அணுசக்தி பேரழிவு: ஜப்பான் Fukushimaவின் பத்தாம் ஆண்டு நினைவலைகள் -ஒரு பார்வை !

Tenth year of Fukushima, Japan

இயற்கை சீற்றம் என்பது யாராலும் மறக்கமுடியாத ,மறுக்கமுடியாத ஒன்றாக அனைவரின் வாழ்விலும் அமைந்துவிடுகிறது.அதுபோல் ஒரு பேரழிவின் தகவல்களை தற்போது பார்ப்போம் .

2011ஆம் ஆண்டு மார்ச்.11ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.0 அளவிலான பூகம்பம் ஏற்பட்டு, 40 மீட்டர் அளவில் கடல் அலையும், Fukushima Daiichi அணுமின் நிலையத்தில் மூன்று அணு அலைகள் உருக காரணமாக இருந்தது. இந்த மூன்று பேரழிவுகளால் 18000 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானவர் வீடுகளை இழந்தனர். இந்த பேரழிவு ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அதனை நினைவு கூறும் விதமாக பழைய புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

Nuclear Disaster Tenth year of Fukushima, Japanநிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடத்திற்குள் சுனாமி உருவாகி அனைத்தையும் அழித்தது. சுனாமி அலை 40 மீட்டர் உயர அலைகளை உருவாக்கி 10 கி.மீ. அளவிற்கு கப்பல்களை வெளியே தள்ளியது. இந்த அழிவிலிருந்த தப்பித்த கப்பல் ஒன்று வடகிழக்கு ஜப்பானில் Kesennuma வில் உள்ளது.

வடக்கு ஜப்பானில் ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் மலை உச்சியிலிருந்து சுனாமியின் அழிவை பார்த்தனர். நகரில் இருந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனரா? அல்லது காணாமல் போனார்களா? என்று தெரியவில்லை. வெள்ளநீர் கடலுக்குள் மீண்டும் சென்றபோது அங்கு ஏராளமான குப்பைகளும், ஆயிரக்கணக்கான இறந்த மக்களையும் கொண்டு சென்றது.

Fukushima Daiichi-யில் உள்ள அணுமின் நிலையத்தில் நுழைந்த சுனாமி அதனுடைய Power மற்றும் குளிரூட்டும் அமைப்பை அழித்தது. அதனை தன் நீரலையால் சூழ்ந்து கொண்டது. மார்ச்12ஆம் தேதி ஆலையின் No. 1 அணு உலையிலிருந்து ஹைட்ரஜன் வெடித்து காற்றில் தன்னுடைய கதிர்வீச்சை கலக்கச் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இதே போன்று வெடிப்புகள் மற்ற இரண்டு உலைகளிலும் நிகழ்ந்தன.

இந்த வெடிப்புகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 20 கிலோ மீட்டர் சுற்றி உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற அரசு கூறியது. பேரழிவு நடந்து பல மாதங்களாகியும் அதில் சிக்கிய பொருட்கள் அணுசக்தி நிலையத்திலிருந்து அடித்து செல்லப்பட்டவை. அணுமின் நிலையத்தில் சேதமடைந்த Fuel Core ஐ குளிர்விக்க Operator Tepco பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான டன் தண்ணீர் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது அந்த நீரை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது.

Category 7 அணுசக்தி பேரழிவில் இருந்து ஒரு வருடம் கழித்து Tomioka வுக்கு அருகில் Highway 6 ல் pachinko parlour திறக்கப்படாமல் உள்ளது. Fukushima அணுமின்நிலையத்திலிருந்து விலகி இருக்குமாறு ஒரு sign warns அங்குயிருப்பவர்களை விலகியிருக்குமாறு எச்சரிக்கை செய்வது மாதிரி இருந்தது.

10வருடம் ஆகியும் இந்த பாதிப்பு இன்னும் குறையவில்லை. Fukushima Daiichi அணுமின் நிலையத்தில் Tokyo அதிகாரிகள் அணுமின்நிலையத்தில் பாதுகாப்பு கியர் கவசம் அணிந்திருந்தனர். சுனாமி தாக்கி ஆறு வருடம் கழித்தும், ஜப்பானில் இன்னும் 900 கொள்கலன்களில் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் டன் கதிரியக்க நீரை என்ன செய்வது என்று ஜப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை.

சேதமடைந்த அணுசக்தி ஆலையின் ஆப்ரேட்டர் மூன்று reactor ல் இருக்கும் குறைகளை கண்டுகொள்ள தவறியதாக கூறினார். இரண்டு வீரர்கள் Fukushima வில் ஏற்பட்ட பேரழிவை ஆராயும்போது பாதுகாப்பு கியர் அணிந்திருந்தனர். 2012ல் ஜப்பான் அரசாங்கம் இதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமித்தது. அதில் இந்த விபத்து போதிய பாதுகாப்பு இல்லாததால் நடந்தது என்று அந்த குழு கூறியது.

பத்து ஆண்டு நினைவு தினத்தின் ஒரு பகுதியாக The Great east Japan பூகம்பம் மற்றும் அணுசக்தி பேரழிவு நினைவு அருங்காட்சியகத்தில் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. அந்த இடத்தில் தன்னுடைய சொந்தங்களை இழந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் தாக்கம் அங்கு இருக்கும் உயிரினங்களை பாதிக்க தொடங்கியது. பிரதமர் Yoshihide Suga அந்த இடத்திற்கு சென்று, அந்த பகுதிகள் விரைவாக சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.