Breaking News

எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆந்தோனி அல்பானீஸ் கொரோனா பிரச்னை காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், பிரதமர் ஸ்காட் மோரீசன் அடுத்த வாரம் தொலைக்காட்சியில் நடைபெறவுள்ள பொது விவாதத்தை தள்ளிவைக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்.

With opposition Prime Ministerial candidate Anthony Albanese isolated over the Corona issue, Prime Minister Scott Morrison has been pushing for a postponement of a public debate on television next week.

வரும் 9-ம் தேதி தேசியளவிலான தொலைக்காட்சியில் ஸ்காட் மோரீசன் மற்றும் ஆந்தோனி அல்பானீஸ் பொது விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் லேபர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆந்தோனி அல்பானீஸுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்துததில் இருக்கிறார்.

இதன்காரணமாக திட்டமிட்டபடி 9-ம் தேதி பொது விவாதம் துவங்கப்பட்டு, 21-ம் தேதி விவாதத்தை முடித்துக் கொள்ளும் திட்டம் கேள்விகுறியாகியுள்ளது. நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகமும் இதுதொடர்பாக எந்தவிதமான மாற்று முடிவையும் எடுக்காதது போல தெரியவந்துள்ளது.

எனினும் பிரதமர் ஸ்காட் மோரீசன் தரப்பில் இருந்து விவாத நிகழ்ச்சி திட்டத்தை மேலும் தள்ளிவைக்க நிர்வாகத்திடம் பேசி வருவதாக தெரியவந்துள்ளது. லேபர் கட்சி பிரதமர் வேட்பாளரின் உடல்நிலை அவர்கள் காரணமாக முன்வைப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஸ்காட் மோரீசனின் நகர்வை தெரிந்துகொண்ட ஆந்தோனி விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட்டு திட்டமிட்டபடி விவாத நிகழ்ச்சியில் மே 9-ம் தேதி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.