அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாக அமைப்பான DEA மற்றும் மெக்சிகோவின் Sinaloa போதைப்பொருள் விற்பனைக்குழுவின் உறுப்பினராக அறியப்பட்ட நபர் மூலமாக பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளின் BVI துறைமுகங்களை கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருள் அனுப்பவதற்கு பயன்படுத்தியதாக ப்ரீமியர் மீது புகார் எழுந்தது.
மேலும் சட்டவிரோத போதைப்பொருள் பரிமாற்றத்தின் வாயிலாக Andrew Fahie 5 லட்சம் முதல் 7 லட்சம வரையிலான அமெரிக்க டாலரை பெற இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கொலம்பிய நாட்டின் கோகோயின் போதைப்பொருளை டார்டோலா தீவுகள் வழியாக போர்டோரிகா, மியாமி மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு கடத்த திட்டமிருந்ததும் அம்பலமாகி உள்ளது.
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் வழியாக போதைப்பொருள் கடத்தலில் உதவியாக துறைமுக நிர்வாக அதிகாரிகள் குழு உதவி புரிந்ததாகவும், அரசியல் ரீதியான தேவைகளுக்கும், கடன்களை திரும்ப செலுத்தவும் உதவி புரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் சந்திப்பு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2021 ம் ஆண்டு நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மியாமி விமான நிலைத்தில் வைத்து Andrew Fahie கைது செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளின் கவர்னர் John Rankin அறிவித்தார். இது தீவுகளில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கும் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த கைது விவகாரம் தொடர்பாக BVI துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களை கொண்டு வர முயற்சிப்பவர்கள் எந்தவித சமரசமும் இன்றி அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று DEA நிர்வாகி Anne Milgram கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அரசியல், ஊழல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் விசாரணை ஆணையத்தின் வாயிலாக வெளிவந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே ப்ரீமியர் கைது நடவடிக்கை என்று கூறப்படுகிறது. மேலும், ப்ரீமியர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து துணை ப்ரீமியர் Natalio Wheatley தற்காலிக ப்ரீமியராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.