Breaking News

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் யார் ? இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே அதிகரிக்கும் மோதலால் தொடரும் இழுபறி

EPS - Continuing drag due to increasing conflict between OPS.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதிமுக மட்டும் 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்புக்கு இடையே மோதல் எழுந்ததாகவும், அப்போது தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்ற காரசார விவாதங்கள் நடைபெற்றதாகவும் தெரிகிறது. சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கமாலேயே கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், அங்கிருந்து அனைத்து நிர்வாகிகளும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அங்கு இருதரப்பு ஆதரவாளர்களும் மாற்றி மாற்றி ஆதரவு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கட்கிழமை மீண்டும் எம்எல்ஏக்கள் கூடி சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

EPS - Continuing drag due to increasingஇந்நிலையில் 10-ம் தேதி திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கோரியது அதிமுக. இதற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் 10ம் தேதி காலையில்அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலாவது எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் முடிவு எட்டப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் 11ம் தேதி கூட உள்ள நிலையில் அன்று எம்எல்ஏக்கள் பதவியேற்பும் நடைபெறும் உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் நிலவும் குளறுபடியால் இன்னும் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது என்றும் அதே நேரத்தில் ஒவ்வொரு நாங்களே விட்டுக்கொடுக்க வேண்டுமா என ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகே கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளரான சசிகலா வந்து பொறுப்பேற்று கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் என்று குறிப்பிட்டு சில பெயர்கள் போடப்பட்டுள்ளன. மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்து சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நிலவி வந்த பனிப்போர் வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது.

K. P. Anbalaganஇதனிடையே அதிமுக கூட்டணியில் பங்கேற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவராக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதனை அதிகாரப்பூர்வமாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.

அதேநேரம் இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் தவிர்த்து அதிமுகவில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களான கே ஏ செங்கோட்டையன் அல்லது கேபி அன்பழகனை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.