Breaking News

கொரோனவில் இருந்து மீண்டவர்களில், 3 ல் இருவருக்கு நீண்ட கால பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Of those who recovered from the corona, 2 in 3 had long-term damage, doctors said.

மோனாஷ் பலகலைக்கழகத்தின் பேராசிரியரும், அல்பிரட் மருத்துவமனையின் மருத்துவருமான காரல் ஹாட்சன் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியவில் உள்ள 30 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவில் இருந்து மீண்ட 70 சதவீதம் பேர், 6 மாதங்களுக்கு பிறகும் அத்தொற்றின் பாதிப்பை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் உடல் அயர்ச்சி, தலைவலி, சளி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகளை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 30 சதவீதம் நபர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதிப்பு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரக்கூடிய மருத்துவரான ஹாட்சன் தெரிவித்துள்ளார்.

ஆனல் இந்த பாதிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இணை நோய் உள்ளவர்களிடம் அதிகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்.

அறிகுறிகள் தென்படாத நோயாளிகளிடம் இதன் பாதிப்பு பெரும்பாலும் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Burnet Institute principal research fellow Joseph Doyleஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளரான ஜோஷப் டோயல், இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட கொரோனா வைரஸ்களின் தாக்கம் வீரியம் மிக்கதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சர்வதேச ஆய்வுகள் பல, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் காணப்படும் கொரோனா வைரஸால் ஏற்படும் நீண்ட கால பாதிப்பை உறுதி செய்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய வகை வைரஸை ஆய்வுக்குட்படுத்துவது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.

ஆய்வாளரான ஜோயல் கூறும் போது கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் பொதுவாக உடல் சோர்வு பிரச்சினை உள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.

கொரோனாவால் ஏற்படும் நீண்ட கால பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிய ஐந்து வருடங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கும் மருத்துவர் டோயக், அதற்கு ஐந்து வருடங்கள் காத்திருப்பும், தொடர் ஆய்வும் அவசியம் என்கிறார்.

Of those who recovered from the corona, 2 in 3 had long-term damage, doctors saidஒரு சிலருக்கு மன ரீதியிலான அழுத்தம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக மருத்துவர் டோயல் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு அனைவரிடத்திலும் காணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் டோயல், பிற நோயுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருப்போரிடம் இதன் தாக்கம் தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கிறார்.

தற்போது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றும்,அதனை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3ttOuyx