Breaking News

கொரோனா தடுப்பூசிகள் மீதான காப்புரிமையை தளர்த்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது

India has demanded the relaxation of patents on corona vaccines

உலக நாடுகளை கொரோனா வைரஸ் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தடுப்பூசி ஒன்றையே உலக நாடுகள் தற்காலிக தீர்வாக கருதுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களுடைய தடுப்பூசி தேவையை ஓரளவு பூர்த்தி செய்துக்கொண்டாலும், இந்தியா, தென் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளும், பல சிறிய நாடுகளும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

தற்போது ஸ்புட்னிக், பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ரா ஜெனிகா போன்ற தடுப்பூசிகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

India has demanded the relaxation of patents on corona vaccines.ஆனால் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்த சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்துள்ளதால், சர்வதேச காப்புரிமை பாதுகாப்பு சடடத்தின் படி, இந்த தடுப்பூசிகளை பிற நாடுகளோ அல்லது நிறுவனங்களோ உற்பத்தி செய்ய முடியாது. இந்த நிலை மாற TRIPS ஒப்பந்தத்தில் சில தளர்வுகளை வழங்கி மற்ற உலக நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்களும் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக வரத்தக அமைப்புக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்கா கூறினாலும், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள பெரும்பான்மையான நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் தடுப்பூசியை உற்பத்தி செய்து உலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

Link Source: https://bit.ly/3tAR9ql