Breaking News

ஆஸ்திரேலியாவில் Astrazeneca தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மேலும் ஒருவருக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The Western Australian Health Minister

இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் Roger Cook, பாதிக்கப்பட்ட பெண்ணை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

40 வயது பெண்ணுக்கு AstraZeneca தடுப்பூசி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது. உடல்நிலை பதிக்கப்பட்டவுடன் அப்பெண் டார்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட இரத்தம் உறைதல் பாதிப்பை போலவே இப்பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Western Australian Health Minister has said that another person has been infected with blood clots as a result of the Astrazeneca vaccine in Australia.இப்பெண்ணுக்கு மார்ச் இரண்டாம் வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், பாதிப்பு தெரியவந்தவுடன் இதனை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் குக் தெரிவித்துள்ளார். தடுப்பூசியால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா என்பதை கண்டறிய நிபுணர் குழு இந்த விவகாரத்தை ஆராய்ந்த பிறகு தான் தெரியவரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் அமைச்சர் குக் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் AstraZeneca தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து வருவதாக அமைச்சர் குக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 7 லட்சம் AstraZeneca தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 30000 டோஸ்கள் மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் செலுத்தப்பட்டதாகவும், அதில் 15,400 டோஸ்கள் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Scott Morrison newஇது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஸ்காட் மோரிசன் AstraZeneca தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படை தன்மையை அரசு கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இதனை வெளிபடுத்துவதாக ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி செலுத்துப்படுவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் குக் பேசியபோது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டால் தான் அனைவருக்கும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது WA மாநிலத்தில் 30 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும்,18,500 Pfizer தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி Andey Robertson தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இருந்து பின்வாங்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் மிகக்குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர்.