Breaking News

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் ஆத்மா தீர்க்கதரிசனத்தின் படி தங்களிடம் திரும்பி வரும் என்று வானூட்டூ பழங்குடியின மக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

The people of Vanuatu have expressed hope that the soul of Prince Philip of England will return to them according to prophecy.

இளவரசர் பிலிப்பின் உடல் தற்போது வின்சர் அரண்மனையில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வானூட்டூவில் அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பழங்குடியின மக்கள் அவருடைய ஆத்மா தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் தங்களிடம் மீண்டும் திரும்பி வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.1974ல் வானூட்டூ தீவுக்கு வருகை புரிந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தங்கள் பழகுடியின பிரிவுக்கு ஒரு வெள்ளை பன்றியை பரிசளித்ததை நினைவில் கொள்கின்றனர்.

The people of Vanuatu have expressed hope that the soul of Prince Philip of England will return to them according to prophecy. 2இதன் மூலம் Tanna பழங்குடியின மக்களுடன் ஒரு நெருங்கிய உறபு இளவரசர் பிலிப்புக்கு ஏற்பட்டதாக அப்பழங்குடியின பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
பிலிப்பின் ஆத்மா தங்களின் காலாச்சாராத்தை காக்க பல வருடங்களுக்கு முன்பு தூர தேசத்திற்கு பயணம் செய்தவர்களில் ஒருவர் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கிருஸ்துவ மதத்தழுவலில் இருந்து தங்கள் இனத்தின் பழமையான கலாச்சாரத்தை காப்பாற்றியதாக அவர்கள் பிலிப்புக்கு நன்றி கலந்த அஞ்சலியை செலுத்திகின்றனர்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வானூட்டூ தீவில் உள்ள Tannah பழங்குடியின மக்கள் யூனியன் ஜாக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளனர்.

The people of Vanuatu have expressed hope that the soul of Prince Philip of England will return to them according to prophecyபழங்குடியினத்தின் மூத்த தலைவர்கள் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அவருக்கு தங்களுடைய அஞ்சலியையும் இளவரசர் பிலிப் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த உறவு நீடிக்க இளவரசர் பிலிப்பின் அனைத்து பொறுப்புகளை இளவரசர் சார்லசுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கூடிய பூர்வகுடி ஆய்வாளருமான kirk Huffman இந்த நகர்வு ஒரு அரசியல் இயக்கமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும்,அன்மையில் ஏற்பட்ட John frum Movement இயக்கத்தை சுட்டிகாட்டுகிறார். தற்போது அந்த பழங்குடியின மக்களுக்குப் அரசியல் அந்தஸ்து கிடைத்திருபதையும் அதன் தொடர்ச்சியாக இவர்களும் அந்த வழிமுறையை கையாள்வதாக தெரிவித்துள்ளார்.