Breaking News

வெஸ்ட்கேட் பகுதியிலுள்ள மண்வளம் பாதிக்கப்பட்டது குறித்து விக்டோரியாவின் முறைகேள் அலுவலர் மாநில சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தார்.

Victoria's Complaints Officer has harshly criticized state environmental officials over soil damage in the Westgate area

விக்டோரியாவிலுள்ள வெஸ்ட் கேட் பகுதியில் சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் 2019-ம் ஆண்டு துவங்கின. அப்பகுதியிலுள்ள மண்வளத்தில் நச்சுத்தன்மை மிகுந்த ரசாயணக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அதை யார் அகற்றுவது என்பது குறித்து கட்டுமான நிறுவனத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

Victoria's Complaints Officer has harshly criticized state environmental officials over soil damage in the Westgate area.இதுகுறித்து விசாரிப்பதற்கு முறைகேள் அலுவலராக டேபோரா கிளாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட கள ஆய்வுகளின் படி, வெஸ்ட் கேட் பகுதி சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் பல்வேறு நடவடிக்கைகள் மண்வளத்தை பாதிக்கச் செய்துள்ளதை கண்டறிந்தார். இதையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் மண்ணை ஆய்வை செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு கட்டுமான நிறுவனம் மறுத்துவிட்டதாக தெரியவந்தது. ஆனால் அதை மாற்ற அதிகாரிகளும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பின்னர் முறைகேள் அதிகாரிக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகளை விமர்சித்த முறைகேள் அதிகாரி டேபோரா கிளாஸ், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் வெஸ்ட் கேட் பகுதியில் சுரங்கப் பாதை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் பலர் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர்.