ஜியார்ஜினா ஹூனான் என்கிற நடுத்துர வயது பெண், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் மெல்பேர்னில் வசித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை முறைகள், ஜியார்ஜினோவுக்கு கடுமையான வேதனை மற்றும் வேறுசில பாதிப்புகளுக்கு உட்படுத்தியுள்ளது.
இதனால் மலேசியாவில் வசித்து வந்த தனது தங்கை கரோலினாவை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்து உடன் தங்க வைத்துக் கொண்டார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜியார்ஜினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து அவருடைய இரண்டு மார்பகங்களும் அகற்றுப்பட்டுவிட்டன. இதனுடைய தொடர்பாதிப்பாக கரோலினாவுக்கு கை நரம்புகளில் பிரச்னை உருவாகியுள்ளது.
இதன்காரணமாக தனது தங்கையை சார்ந்திருக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய உடல்நலப் பாதிப்புகளை குறித்தும், தனது தங்கையில் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த கரோலினா, தங்கை ஜார்ஜினாவுக்கு குடியேற்றம் வழங்கக் கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. மலேசியாவில் சகோதிரிகளின் தந்தை இருப்பதால், தங்கை ஜார்ஜினாவை ஆஸ்திரேலியாவில் நிரந்திரமாக தங்க அனுமதிக் முடியாது என்று தெரிவித்துவிட்டது. ஆனால் தனது தந்தை எப்போது தங்களுடைய வாழ்க்கையில் இருந்தது இல்லை. அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும அமைச்சகத்திடம் ஆவணம் வழங்கி கரோலினா மன்றாடியுள்ளார்.
எனினும் ஜார்ஜினாவை மலேசியாவுக்கு திருப்பி அனுப்புவதில் ஆஸ்திரேலிய அரசு கவனமாக இருக்கிறது. இதனால் செய்வதறியாது தவிர்க்கிறார் கரோலினா. அவருடைய கணவர் பணியாற்றினால் தான் சாப்பிடுவதற்கு உணவு மற்றும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படும் என்பதால், கையறு நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் கரோலினா விஷயத்தில் கருத்து கூற மறுத்துவிட்டது. இதனால் சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள கரோலினாவும் அவருடைய கணவரும் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களிடம் பேசியுள்ளனர்.