Breaking News

வர்ரோவா மைட் பூச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 18 மில்லியன் டாலர் இழப்பீடு..!!

வர்ரோவா மைட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட தேனீக்கள் வளர்ப்பாளர்களுக்கு 18 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது.

Varroa mite victims to receive $18 million in compensation.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 34 இடங்களைச் சேர்ந்த தேனீ வளர்ப்பாளர்கள் வர்ரோவா மைட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அதிகம் பாதித்துள்ள கேம்ப்வைல், ஹோம்ஸ்வில்லே, கெலன் ஓக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் தேனீக்கள் வளர்க்கப்படும் பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Varroa mite victims to receive $18 million in compensationஇதன்மூலம் கிடைக்கப்பெற்ற முடிவுகளை வைத்து நியூ சவூத் வேல்ஸ் மாகாண அரசு 18 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட தேனீக்கள் வளர்ப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய அரசின் மீன்வளம் மற்றும் வனத்துறை அமைச்சர் முர்ரே வாட், வர்ரோவா பூச்சி நமது தேனீ மற்றும் மகரந்தச் சேர்க்கை தொழில்களுக்கு மிக முக்கியமான அச்சுறுத்தலாக உள்ளன. இந்த பூச்சிகளை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அப்போது தான் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார வகையிலும் பயன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.