Breaking News

நோய் எதிர்ப்பு காலத்தை 28 நாட்களாக குறைத்திட சுகாதாரத்துறை பரிந்துரை..!!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனாவில் இருந்து மீண்ட பலருக்கு, வெகு சீக்கரமாகவே மீண்டும் நோய் பாதிப்பு ஏற்படுவது குறித்து நாட்டின் உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The health department has recommended reducing the period of immunity to 28 days

ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு, கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீரான பலர், மீண்டும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 28 நாட்களாக குறைத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிறிஸ் பிக்சன், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களில் மறுபடியும் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து அரசு கவனித்து வருகிறது. தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் உயர்மட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்கியுள்ள பரிந்துரைகளை பரிசீலிக்கும் என்று கூறினார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் 30 வயதை கடந்தவர்களுக்கு நான்காவது முறையாக கொரோனா வைரஸ் போடும் பணிகள் துவங்கியுள்ளது. மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 3 மாத இடைவேளைக்கு பிறகு நான்காவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.