Breaking News

தண்ணீர் சறுக்கு விளையாடும் போது மாரடைப்பு ..விளையாட்டு விபரீதமான பரிதாபம் !

குடும்பத்தோடு நீர்வீழ்ச்சிக்குச் சென்றபோது தண்ணீர் சறுக்கு விளையாடிய 10 வயது சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் Michigan-இல் இருந்து வந்த London Eisenbeis, 83 மீட்டர் நீளமுள்ள நீர் சறுக்கு விளையாட வரிசையில் நின்றபோது உற்சாகமாக இருந்தார்.

London Eisenbeisதுரதிர்ஷ்டவசமாக, இந்த உற்சாகமே அவளுடைய மரணத்திற்கு காரணமாக அமைந்தது..Long QT syndrome எனப்படும் இருதய நோய் அந்த சிறுமிக்கு இருந்தது அவரது பெற்றோருக்கு தெரியாது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர்.சிறுமியின் தாயார்,Tina Eisenbeis கூறுகையில்,நீர் சறுக்கு விளையாடும் போது அவர் உட்சாகமாக இருந்ததாகவும் ,திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறினார் .

உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் ,சிறிது நேரம் கழித்து உயிர் இழந்தார்.இந்த சம்பவம் 2018 இல் நிகழ்ந்தது . ஆனால் டினா தனது மகளின் கதை மறைக்கப்பட்ட இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சம்பவம் உதவும் என்றும் கூறினார்.மேலும் தனது மகளின் நினைவுகளையும் அவர் பகிர்ந்தார்.