Breaking News

ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணிக்கு இந்திய வம்சாவளியான ஒருவரது மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

Tanveer Sangha

நீங்கள் கடினமாக உழைத்து உறுதியுடன் இருந்தால்,ஒவ்வொரு கனவையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட Tanveer Sangha உதாரணம். இது அவரது குடும்பத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

பிக் பஷ் லீக்கின் 19 வயதுடைய இவரின் நல்ல ஆட்டத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 ஆஸ்திரேலியா நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.NSW கிரிக்கெட் வீரரான இவருக்கு இந்த சீசன் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. மேலும் இதுவரை அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவரது தந்தை Joga Singh Sanga 1997 இல் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, தனது மகன் ஆஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவார் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், Tanveer-க்கு விளையாடுவதற்கான சூழல் மற்றும் பொழுதுபோக்கு இருந்தது. ஆனால் கிரிக்கெட் அவரது முதல் தேர்வாக இருக்க வில்லை மேலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக அவர் கபடி விளையாடி உள்ளார் என கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் தனது கிளப்பில் அதிக ரன் எடுத்த வீரர் மட்டுமல்லாமல் தொடரின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது வீரர் தான் Tanveer Sanka. 2020 ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு காக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெயரைப் பெற்றார்.

ஒரு தந்தையாக அவரது மகனைப் பற்றி பெருமைப்படுவதாகவும், Tanveer விளையாடுவதை நேரில் பார்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார். ஆஸ்திரேலியா ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2வது கிரிக்கெட் வீரர் Tanveer Sanga-ஆவார். முதலாவதாக விளையாடியவர் Gurinder Sandhu என்பது குறிப்பிடத்தக்கது.