Breaking News

சிட்னியில் நீரில் மூழ்கிய குழந்தை..கொரோனா பாதிப்பில் Wollongong..உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் மரணம் ..பற்றிய ஒரு சிறிய அலசல் !

Baby drowns in Sydney

சிட்னியில் நீரில் மிதந்த குழந்தையை பற்றிய செய்திகள் :

Yarra Bay, La Perouseசிட்னியின் தென்கிழக்கு பகுதியில், நீரில் மிதப்பதாக கூறப்பட்ட குழந்தையின் உடலை தேடும் பணி இன்றும் தொடர்கிறது. நேற்று மாலை 5 மணியளவில் Yarra Bay, La Perouse க்கு வந்த அவசர அழைப்பில் ஒரு குழந்தை நீரில் இறந்து விட்டதாக தகவல் வந்தது.
ஆழமில்லாத நீரில் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் பையில் சுற்றி மிதந்ததை பார்த்ததாக பலர் போலீசிடம் சாட்சி கூறினர். இந்த பகுதியில் பலரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் . ஆனால் வெளிச்சம் போதியதாக இல்லாததால் ,இரவு கைவிடப்பட்டு மீண்டும் காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

கொரோனா பாதிப்பில் Wollongong பகுதி :

ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் திரும்பிய வெளிநாட்டு பயணிக்கு Covid – 19 தொற்று உறுதியானதால் Illawarra வில் உள்ள பல பகுதிக்கு செல்வதற்கான NSW Health எச்சரிக்கையை விடுத்தது. Wollongong பகுதியில் உள்ள ஒருவரை தனிமைப்படுத்திய நேரத்தில் செய்த இரண்டு சோதனையிலும் நெகடிவ் என தகவல் வெளிவந்துள்ளது . ஆனால் 16வது நாளில் மீண்டும் எடுத்த சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானது .

Wollongong coronaஇது குறித்து NSW Health கூறுகையில், அவருக்கு தொற்று குறைவாக இருப்பதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு Negative ஆக இருக்கிறது. பிப்ரவரி 2ம் தேதி Austinmer Headlands Hotel மற்றும் Bulli Bulli Beach Cafe ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தால் சோதனை செய்யவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் , Mootch & Me at Brighton Le Sands, North Wollongong Optus, Fairy Meadow ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தால் சோதனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

காட்டுத்தீ மானியங்கள் :

Deputy Premier கூறுகையில், தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு மானியம் வழங்கப்பட்டபோது, தவறியவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்றார்.
Wildfire Grantsகடந்த ஆண்டு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 180 மில்லியன் டாலர்களை அரசாங்கம் திறந்த விண்ணப்பம் இல்லாமல் வழங்கியது. நீல மலைப்பகுதிக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. Blue Mountains பகுதி காட்டுத்தீயினால் 65 மில்லியன் அளவுக்கு பொருளாதார தாக்கம் ஏற்பட்டதாக கூறிய அரசாங்கம், அப்பகுதிக்கு எந்த பணமும் வழங்கவில்லை. மத்திய கடற்கரையும் இதை தவறவிட்டது. இரு பகுதியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். இப்போது இரண்டாவது சுற்று மானியங்கள் உள்ளன. 250 மில்லியனை திறந்த விண்ணப்பத்தின் மூலம் தர உள்ளது.

உணவு டெலிவரி செய்பவர்களின் மரணம் :

சிட்டினி சாலைகளில் டெலிவரி rider இறப்பு ஏற்பட்ட இரண்டு மாதத்திற்கும் மேலாகியும், SafeWork NSW rider-ருக்கு NSW சாலை விதிகள் பற்றி தெரியாதததே விபத்துக்கு காரணம் என்றும் மற்றும் மோசமாக பராமரிக்கப்படாத, பாதுகாப்பற்ற சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளை பயன்படுத்துவதே விபத்திற்கு காரணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.