Breaking News

தைவான் நீரிணைப் பகுதியில் செலுத்தப்பட்ட அமெரிக்கா, கனடாவின் போர்க்கப்பல்கள் : அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சீனா கண்டனம்

US, Canadian warship sunk in Taiwan waters. China condemns threat to peace

சீனா தைவான் இடையே ஏற்கனவே நிலவி வரும் பதட்டமான சூழல் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. தைவான் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடாவின் போர்க்கப்பல்கள் செலுத்தப்பட்ட விவகாரத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருநாடுகளும் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், அதே நேரத்தில் தங்களது கப்பல்கள் பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ இயக்கமான PLA தெரிவித்துள்ளது.

அக்டோபர் முதல் வாரத்தில் தைவானின் எல்லை பகுதிக்குள் ஏராளமான சீன ராணுவ விமானங்கள் பறக்க விடப்பட்டன. அதேபோன்று சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் J-16 போர் விமானங்கள் பறக்கவிடப்பட்டு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியதாக தைவான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. வான்வெளி பாதுகாப்பு எல்லையான ADIZ -க்குள் அத்துமீறி சீன விமானங்கள் நுழைந்தது குறித்து தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான அா்லீக் பியூா்க் ரகத்தைச் சோ்ந்த யுஎஸ்எஸ் டேவே போா்க் கப்பல் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான தைவான் நீரிணைப் பகுதியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளது.

US, Canadian warship sunk in Taiwan waters. China condemns threat to peace.மேலும் கனடா கடற்படைக்குச் சொந்தமான HMCS வின்னிபெக் போா்க் கப்பலும் யுஎஸ்எஸ் டேவேயுடன் இணைந்து ரோந்துப் பணியை மேற்கொண்டது. இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் அனைவருக்கும் சொந்தமானது என்ற அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் உறுதிப்பாட்டை பறைசாற்றும் விதமாக அந்த இரண்டு கப்பல்களும் தைவான் நீரிணைப் பகுதியில் செலுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது. தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது. இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Link Source: https://ab.co/3je7U8u