Breaking News

பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்கிற்கு ஆஸ்திரேலிய தேசிய தலைவர்கள் ஆதரவு : அனைவரும் ஒரே புள்ளியில் நின்று ஆதரவு தெரிவிப்பது மிகவும் எதிர்பாராதது என தேசியக்கட்சி தலைவர் Barnaby Joyce பேச்சு

Australian national leaders support climate change goal. Nationalist leader Barnaby Joyce

பிரிட்டனில் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு COP 26 -ஐ முன்னிட்டு ஆஸ்திரேலியா பல்வேறு இலக்குகளை நிர்ணயித்து உள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்துவது, 2030ஆம் ஆண்டுக்குள் 26 முதல் 28 சதவீதம் குறைப்பது என்பது தொடர்பான பல்வேறு இலக்குகளை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு மாகாண பிரியர்களும் அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அரசின் கூட்டணி கட்சியான தேசிய கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள தேசியக் கட்சியின் தலைவர் Barnaby Joyce ஆஸ்திரேலிய அரசு நிர்ணயித்துள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்கிற்கு மிகவும் எதிர்பாராத விதமாக அனைவரும் ஒரே புள்ளியில் நின்று ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய புதுப்பித்தல் சக்தி துறை அமைச்சர் Angus Taylor உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்று பேசினர். 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் அளவிலான வெளியேற்று இலக்கு என்பதை எந்தெந்த வகைகளில் ஆதரிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் அரசு தெரிவித்துள்ள தொழில்நுட்பம் பிரதானம் – வரிகள் அல்ல என்கிற நிலையிலிருந்து இதனை அணுகுவது தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

Australian national leaders support climate change goal. Nationalist leader Barnaby Joyce.இந்நிலையில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள பருவநிலை மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டில் இருந்ததுபோல 26 முதல் 28 சதவீதம் அளவுக்கான வெளியேற்ற நிலையை 2030ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்துவதற்கான குறைந்தபட்ச இலக்கை நிச்சயம் எட்டமுடியும் என்று கூட்டத்தில் பங்கேற்ற தேசிய கட்சி தலைவர் Barnaby Joyce கூறியுள்ளார். மேலும் மிகவும் எதிர்பாராத வகையில் ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் அளவிலான வெளியேற்று இலக்கை அடைவது என்பது கடினம் என்றும் பல்வேறு மாகாணங்கள் ஊரகப் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து இந்த இலக்கை எட்டுவது சாத்தியமா என்பது குறித்தும் இதர கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வரிகள் இல்லை என்றால் வேறு எந்த வகையில் மக்களிடம் பணம் வசூலிக்கப்படும் என்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவரையும் வரவேற்பதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/2Xmvyrx