Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பு : ஒரே நாளில் 265 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சமூக பரவல் மூலமாக ஒரேநாளில் 265 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மருத்துவமனைகளில் இதுவரை 606 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 172 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் மேலும் 71 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்கனவே முடக்க நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடர்ந்து வருகிறது அந்த வகையில், மேலும் சில தலைப்புகளை அறிவித்து நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Announcement of further relaxation in the state of New South Wales. 265 people infected with the virus in a single day.அந்த வகையில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்ட இளைஞர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில் தளர்வுகள் படிப்படியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்வது, கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டர்கார்டன் எனப்படும் சிறு குழந்தைகளுக்கான பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. மாணவர்களை வரவேற்பதற்கு ஆசிரியர்கள் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு தயார் நிலையில் இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வித்துறை Sarah Mitchell
அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகளில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் அண்டை மாகாணங்களுக்கு செல்வதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3pdDyH5