Breaking News

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 30,000 பேர் வரை கூடலாம் – விக்டோரியன் அரசு அனுமதி !

Up to 30,000 people can gather at the Australian Open tennis court

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 30,000 பேர் வரை கூடலாம் என்று விக்டோரியன் அரசு அனுமதி அளித்துள்ளது .இது குறித்து விக்டோரியன் விளையாட்டு அமைச்சர் Martin Pakula கூறுகையில், கடந்த ஆண்டைவிட இது 50 சதவீதம் குறைந்துள்ளதாக கூறினார் .மேலும் முதல் எட்டு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 30,000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Tournament boss Craig Tiley கூறுகையில் ,பல மாறுபட்ட ஏற்பாடுகள் இருந்தாலும் இந்த போட்டி அனைத்து வீரர்களுக்கும் நியாயமானதாக இருக்கும் என்று கூறினார். விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும் Japanese star Kei Nishikori மற்றும் French world No. 28 Benoit Paire ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக அளவில் 69 வது இடத்தில் உள்ள Ajla Tomljanovic ,French No.53 Alize Cornet முதல் சுற்றில் நவோமி ஒசாகாவுடன் இரண்டாவது சுற்று சந்திப்புடன் மோதுகின்றனர்.மற்ற எட்டு ஆஸ்திரேலிய பெண்களுக்கும் போட்டிகளில் வைல்டு கார்டுகள் வழங்கப்பட்டன.ஊரடங்கில் சிக்கிக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சரியாக நேரம் ஒதுக்கி பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் Mr Tiley கூறினார்.

ஒன்பது நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வரும்போது வீரர்கள் எப்போது எப்படி விளையாட வேண்டும் என்ற தகவல்களை கொடுத்துளோம் என்று அவர் கூறியுள்ளார்.போட்டி மைதானத்தில் 30,000 பேர் வரை கூடலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளதால் இரண்டு வாரங்களில் 390,000 மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.இது இறுதிப் போட்டிகளில் பகல் போட்டியின் போது 12,500 பேரும் மற்றும் இரவு நேரங்களில் 12,500 பேருக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.