Breaking News

உக்ரைனின் மரியுபோல் நகரில் திரையரங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் வரை பலி : உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் 31வது நாளாக தொடர்கிறது

Up to 300 killed in theater attack in Mariupol, Ukraine.Russia airstrikes on Ukraine continue for 31 days

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 31 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கீவ், கார்கிவ், லிவிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை முற்றிலும் அழிக்கும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து தனது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

ரஷ்ய ராணுவம் படிப்படியாக முன்னேறி பல்வேறு பகுதிகளையும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

Up to 300 killed in theater attack in Mariupol, Ukraine.Russia airstrikes on Ukraine continue for 31 days.ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி மரியுபோல் நகரில் இருந்த திரையரங்கு ஒன்றில் ஏராளமானோர் பதுங்கி இருந்தனர். இந்நிலையில் அந்த திரையரங்கில் இருந்து ஏற்கனவே 130 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், திரையரங்கின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரியுபோல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் உரிய எண்ணிக்கை விவரங்களை எடுக்க முடியவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேரத்தில் திரையரங்கு மீது தாங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலில் ஏராளமானோர் பல்வேறு நாடுகளுக்கு வெளியேறுவதற்காக அங்கு குழுமி உள்ள நிலையில் மனிதாபிமான வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Up to 300 killed in theater attack in Mariupol, Ukraine.Russia airstrikes on Ukraine continue for 31 days,.,ஆனால் தொடர்ந்து ரஷ்யா அதனை நிராகரித்து வந்த நிலையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். டோனட்ஸ்க் பகுதியில் இந்த மட்டும் இதுவரை 65 ஆயிரம் பேர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உள்ளதாகவும் அவர்கள் வாகனங்கள் மற்றும் நடந்தே அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியதாகவும் கவர்னர் Pavlo Kyrylenko கூறியுள்ளார்.

மக்கள் வெளியேறுவதற்கான தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவிக்குமாறு பல்வேறு முறை கேட்டுக்கொண்டும் அது தோல்வியிலேயே முடிந்ததாகவும் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஏராளமான உயிர்ப்பலிகள் நடைபெற்று வருவதாக ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கொத்து கொத்தாக மனிதர்கள் பலியாகி உள்ள காட்சிகள் இருப்பதாகவும் ஒரே இடத்தில் 200 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்த பகுதியே முழுவதுமாக ஒரு குறைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனிய படைகளை பல்வேறு கிழக்கு பகுதிகளுக்கு நகர்த்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து உக்ரைனிய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

Link Source: https://ab.co/3JLVZdo