Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் 4 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : தொற்று தொடர்புடையவர்களுக்கான விதிகளை மாற்றியமைத்து மாகாண அரசு உத்தரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிதாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 549 ஆக உள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மாகாணத்தில் வைரஸ் பாதிப்பு கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் களுக்கான விதிகளில் தளர்வு நிலை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Corona virus infects 4,549 more in South Australia. provincial government orders change in rules.தொற்று பாதித்தவர்கள் உடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பிசிஆர் பரிசோதனை மூலம் நெகட்டிவ் என்ற சான்று பெற்ற பின்னர் அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுபடலாம் என்று தெற்கு ஆஸ்திரேலியா ப்ரீமியர் Peter Malinauskas கூறியுள்ளார். இந்திய தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களோடு நேரடி தொடர்பில் ஈடுபடக்கூடாது என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை மூலமாகவும் அவர்கள் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியை மாகாண அரசு வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது 28 ஆயிரத்து 198 பேர் வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களில் முறையே 30, 40 , 60 மற்றும் 90 வயதுடைய பெண் ஒருவர் என நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் ப்ரீமியர் Peter Malinauskas
தெரிவித்துள்ளார்.

157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் பெருமளவு மாற்றம் ஏற்படாத பட்சத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மாஸ்க் அணிவது தொடர்பான உத்தரவில் தளர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உள்ளரங்க நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Corona virus infects 4,549 more in South Australia. provincial government orders change in rules..இதேபோன்று தொற்று பாதிப்பின் காரணமாக பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாகாண அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் பிரீமியர் Peter Malinauskas உத்தரவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ள நிலையில் இது வரும் வாரங்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Chris Picton கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3uxx4ng