Breaking News

சீனா மற்றும் சாலமன் தீவுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் : பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் எதிரொலிக்க வாய்ப்பு

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை பல்வேறு நாடுகள் சுட்டிக்காட்டி வந்த நிலையில், தற்போது சாலமன் தீவு மற்றும் சீனாவுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக புகைப்படங்களுடன் கூடிய பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பது ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச தேசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் அதிகாரம் தொடர்பான சவாலாக பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

China, Solomon Islands sign defense pact.பசுபிக் பிராந்தியத்தில் உட்பட்ட சில பகுதிகளில் சீனா தொடர்ந்து தனது முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும், பெய்ஜிங் உதவியுடன் ஆதார ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை அந்த பகுதியில் மேற்கொள்வதற்கான திட்டங்களை சீனா வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது உடனான ஒப்பந்தத்தை சீனா மேற்கொண்டு இருப்பதாகவும் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒப்பந்தம் தொடர்பான புகைப்படங்கள் ஏராளமான கேள்விகளை எழுப்புவதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் சீனா எந்த பகுதியிலும் வளங்களை வாங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நலையில் சாலமன் தீவு தொடர்பான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் பல பில்லியன் டாலர்களை செலவழித்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஒப்பந்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பசுபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகாரம் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த ஒப்பந்தம் எழுப்பி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சாலமன் தீவு ஆஸ்திரேலியா இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை இது கேள்விக்குள்ளாக்கும் நிலையில் இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் வரைவு ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து சாலமன் தீவு வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் கோரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3IF7Bx9