Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் மூடப்படாத சுரங்கங்கள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Unclosed mines in Western Australia have been reported as a threat to public safety.

மேற்கு ஆசியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அதன் ஒரு அங்கமாக நிலக்கரி சுரங்கங்களை வெட்டி எடுப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் ஏலம் விடப்படுகிறது .அவ்வாறு ஏலம் விடப்பட கூடிய நிலக்கரி சுரங்கங்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தேவை முடிந்த பிறகு அந்த சுரங்கங்களை முறையாக மூடாமலும் அங்கு இருக்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தாமலும் செல்கின்றனர். மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அந்த இடத்தையும் மாற்றி தராமலும் விட்டுச் செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் சூழியல் தன்மை பாதிக்கப்படுவதோடு அங்கு வாழக்கூடிய மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

Unclosed mines in Western Australia have been reported as a threat to public safetyமேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் சுரங்கங்கள் மூடப்படாமல் இருப்பதாக சுரங்கத் துறை தெரிவித்துள்ளது. சுரங்க நிறுவனங்களிடமிருந்து கடந்த ஆண்டு மட்டும் சுமார் $12.1 பில்லியன் அளவுக்கு ராயல்டி கிடைத்ததாகவும் ஆனால் அதில் சுமார் $ 683000 அளவிற்கே புனர்வாழ்வுக்கு பயன்படுத்தியதாகவும் Dundas Shire பகுதியின் சி இ ஒ Peter Fitchat குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த செயலின் காரணமாக உலகின் மிகப்பெரிய உட்லேண்ட் காடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசின் ஆர்வமின்மையே இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புனர்வாழ்வு திட்ட நிதியின் மூலமாக இதனை சரி செய்ய வேண்டும் என்றும் Peter Fitchat வலியுறுத்தியுள்ளார்.

Unclosed mines in Western Australia have been reported as a threat to public safety,மேற்கு ஆஸ்திரேலியாவின் சுரங்கத் துறை அமைச்சர் Bill Johnston கருத்துப்படி சுரங்க நிறுவனங்களின் கட்டாய நிதி பங்களிப்பு திட்டத்தின் கீழ் $219,493,000 நிதி சேர்ந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் ஒரு மில்லியன் டாலர் அளவுக்கே இந்த நிதியில் புனர்வாழ்வுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளூர் பிரதிநிதிகளின் பொதுக்கூட்டத்தில் சுரங்கங்களை கையாள்வதற்கும் கைவிடப்பட்ட சுரங்கங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கூடிய வகையில் முறையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சுரங்கத் துறைக்கு வலியுறுத்தப்பட்டு இருப்பதாக Peter Fitchat தெரிவித்துள்ளார் .

ஆனால் சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து இன்னும் இதற்கு முறையான பதில் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சுரங்கத்தை ஏலம் எடுக்கக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய பயன்பாடு முடிந்ததும் அந்த பகுதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வகையில் மாற்றி தராமல் அதனை வேறு ஒரு நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு விற்று விடுவது அல்லது தங்களுடைய பொருளாதார நிலையை சுட்டிக்காட்டி சுரங்கத்தை அப்படியே விட்டு செல்வதும் இதுபோன்ற நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3B3vF9q