Breaking News

குயின்ஸ்லாந்தில் காவல்துறையினருக்கான கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் தடுப்பூசி போடாவிட்டால் பணியிடை நீக்கம் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என எச்சரிக்கை

QPS எனப்படும் குயின்ஸ்லாந்து காவல்துறையினருக்கு கட்டாய தடுப்பூசி தொடர்பான அறிவிப்பை காவல்துறை ஆணையர் பிறப்பித்திருந்தார் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் அனைத்து காவல் துறையினரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்பது அந்த உத்தரவாகும். அக்டோபர் 4ஆம் தேதி வரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும் என்றும், அப்படி செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கான உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி அவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குயின்ஸ்லாந்து தொழிலாளர் நல ஆணையம் QIRC நீதிமன்றத்தை நாடியது.
அதில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காவல்துறை ஆணையர் Katarina Carroll உத்தரவு பிறப்பிக்க எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிடப்பட்டது. மேலும் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் குயின்ஸ்லாந்து தொழிலாளர் நல ஆணையத்தின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவல்துறையினர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியிடை நீக்கம் அல்லது அபராதம் செலுத்த வேண்டியது இவற்றை சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Case against compulsory vaccination for police in Queensland. Court dismisses case, warns of dismissal or fines if not vaccinated.எனினும் உடல்நலக் குறைவுகள் இருந்தால் மட்டும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் மற்றவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர்
Katarina Carroll எச்சரித்திருந்தார். அதேநேரத்தில் குயின்ஸ்லாந்து தொழிலாளர் நல ஆணையம் தொடர்ந்து காவல்துறையினரின் விருப்பத்திற்கு ஏற்பவே தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கவேண்டும் என்று கூறி வருகிறது.

இந்தச் சூழலை சமாளிப்பதற்காக குயின்ஸ்லாந்தில் பணியமர்த்தப்படும் காவலர்களின் எண்ணிக்கையை சராசரியாக குறைப்பதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் தடுப்பூசியை செலுத்தாத காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதிலும் காவல்துறை ஆணையர் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3Bh2PSN