Breaking News

ரஷ்ய அதிபர் புதின் வெளிநாட்டுப் போராளிகள் போருக்குள் கொண்டுவரவுள்ளது ரஷ்ய படையெடுப்பின் திருப்புமுனை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Ukrainian President Volodymyr Zelensky has said that Russian President Vladimir Putin's plan to bring foreign fighters into the war is a turning point in the Russian invasion.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தனது சமீபத்திய வீடியோவை வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்ற நாடுகளைச் சேர்ந்த போர் பயிற்சி பெற்ற வீரர்களை உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் களமிறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Ukrainian President Volodymyr Zelensky has said that Russian President Vladimir Putin's plan to bring foreign fighters into the war is a turning point in the Russian invasion..மேலும் தொடர்ந்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் நாட்டை விடுவிக்க கூடுதலாக எங்களுக்கு எவ்வளவு காலம் வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அது நிறைவேறும் வரை ஓயமாட்டோம். பயங்கரமான எதிரியை எதிர்த்து நடைபெற்று வரும் நாட்டுப்பற்று நிறைந்த இப்போரில், எங்களுடைய எவ்வளவும் வீரர்கள் இறந்துபோனாலும் நாங்கள் விலகமாட்டோம் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வளைகுடா நாடுகளைச் சேர்ந்த போர் பயிற்சி பெற்ற 16 ஆயிரம் தன்னார்வலர்களை உக்ரைன் போரில் பங்குபெறுவதற்கு ரஷ்யா அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைனின் மிக முக்கியமான நகரங்களுக்குச் சென்று வீரர்கள் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்று விளாடிமிர் புதின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஜோக்கு கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3w3Z1po