Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் 54 வயது மாற்றுத்திறனாளி உயிரிழந்த விவகாரம் : பராமரிப்பாளரே கொலை செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்

54-year-old disabled paramedic killed in Adelaide, South Australia. Caregiver pleads guilty in court.

அடிலெய்ட் நகரில் கடந்த ஏப்ரல் 2020ம் ஆண்டு 54 வயதான மாற்றுத்திறனாளியான Ann Marie Smith கடுமையான மன அழுத்தம், உறுப்பு செயலிழப்பு, உடல் புண்கள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பெரு மூளை வாதம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெண் Rosa Maria Maione மாற்றுத்திறனாளியை கொலை செய்தாக காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீஸ் காவல் விசாரணையை தொடர்ந்து நீதிமன்றத்தில் கடந்த ஜீலை Rosa Maria Maione ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாற்றுத்திறனாளி Ann Marie Smith -யை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அவர், நீதிபதி முன்பு மன்னிப்பு கோரினார்.

54-year-old disabled paramedic killed in Adelaide, South Australia. Caregiver pleads guilty in courtKensington பார்க் இல்லத்தில் தனியாக வசித்து வந்த 54 வயது மாற்றுத்திறனாளி Ann Marie Smith யை NDIS ஊழியரான Rosa Maria Maione பராமரித்து வந்தார். இடுப்பில் 15 செ.மீ அளவுக்கு படுக்கைப் புண் இருந்தும் அதற்கான எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், இடுப்பு எலும்பு தெரியும் அளவுக்கு பாதிப்பு அடைந்திருந்தாகவும் அதற்கு முறையான பராமரிப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளியான Ann Marie Smith கழிவறையில் பயன்படுத்தும் நாற்காலி முற்றிலும் சிதைந்திருந்த நிலையில் அதனை பராமரிப்பாளர் Rosa Maria Maione முற்றிலும் கவனிக்காமல் இருந்து வந்தது. அவரது பணி புறக்கணிப்பை காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

அவரது பற்களை சுத்தம் செய்வது, குளிக்க வைப்பது, உணவு அளிப்பது போன்ற எந்த பணிகளையும் Rosa Maria Maione முறையாக மேற்கொள்ளவே இல்லை என்றும், இதுவே ஸ்மித் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருந்தாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Rosa Maria Maione நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால் அவர் இத்தாலிக்கு நாடு கடத்தப்படுவார் என்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, விலங்குகள் கூட மனிதாபிமானத்தோடு நடத்தப்படும் நிலையில் ஒரு மாற்றுத்திறனாளி மனிதரை இந்த அளவுக்கு மோசமாக பராமரிப்பாளர் நடத்தியது வேதனையை அளிப்பதாகத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தான் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், இதற்கான தான் தினமும் Ann Marie Smith இடம் மன்னிப்பு கோரி வருவதாகவும் Rosa Maria Maione உருக்கமுடன் தெரிவித்தார். இந்நிலையில் இவரை பணியமர்த்திய NDIS நிறுவனமும் குற்றவாளியாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நடைபெற்ற நிகழ்வுக்கு அவர்களும் காரணம் என்பதால் உரிய தண்டனை கிடைக்க உள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Link Source: https://ab.co/3vZF0jH