Breaking News

ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து உக்ரைன் நாட்டிலுள்ள பண்ணைகள் பல பொதுமக்களுக்கு தடையின்றி உணவளிக்கும் பொருட்டு இறைச்சிக் கூடங்கள், பால் தொழிற்சாலைகள் மற்றும் மாவு உற்பத்தி ஆலைகளாக மாறியுள்ளன.

உக்ரைன் நாடு ஐரோப்பாவின் உணவுக் களஞ்சியமாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் ரஷ்யா படையெடுப்பு காரணமாக அந்நாட்டிலுள்ள விவசாயிகள் பலர் உரம் மற்றும் பயிர் விதைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால் விரைவில் உக்ரைன் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

As the Russian invasion intensifies, farms in Ukraine have been turned into butcheries, dairy and flour mills in order to provide unrestricted food to many civilians..இந்நிலையில் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்கும் விதமாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் பலர் தங்களுடையை பண்ணைகளை உணவு தயாரிக்கும் கூடங்களாக மாற்றியுள்ளனர். கைவிவ் பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வைத்திருக்கும் கீஸ் ஜுசிங்கா என்பவர், மக்களுக்கு வேண்டின் பன்றி இறைச்சிகளை வழங்கி வருகிறார். அதேபோல தன்னார்வலர்கள் பலர் அவருடைய பண்ணைக்கு வந்து, பொதுமக்களுக்கு வேண்டிய தாணியம், காய் கறிகள், பால் உள்ளிட்டவற்றை பெற்றுச் சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கின்றனர். இதேபோன்று மேலும் பல விவசாயிகள் ஊரகப் பகுதிகளில் இருந்துகொண்டு நகரப் பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இடையில் தவித்து வரும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

Link Source: https://ab.co/3tTYqUn