Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : வயதான தம்பதியர் நிகழ்விடத்திலேயே இருவரும் பலி

Two cars collide head-on in South Australia. Elderly couple killed at scene

தெற்கு ஆஸ்திரேலியாவின் பார்டர்டவுன் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 90 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி 85 வயது பெண்மணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Bordertown – Naracoorte சாலை பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிர விபத்து பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக Naracoorte சாலையின் இருபுறமும் மூடப்பட்டுள்ளது. Rowney மற்றும் Stott சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளிலும் இதே சாலையில் நடைபெற்ற விபத்தில் ஏராறமானோர் உயிரழந்த்தாக போலீசார் கூறியுள்ளனர்.

Link Source: https://ab.co/2UYlHad