Breaking News

கொரொனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல் : அதிக கோவிட் நோயாளிகளை ஏற்றுக் கொள்வதாக ராயல் அடிலெய்ட் மருத்துவமனை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் ஒவ்வொரு மருத்துவமனைகளாக திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலையில் ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரமாக காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Prolonged problem in getting hospital space for Corona patients. Royal Adelaide Hospital announces acceptance of more Covid patients.இதனிடையே மேற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக நோயாளிகளை அனுமதிக்கத் தயாராக உள்ளதாக ராயல் அடிலெய்ட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. Broken Hill Health Service அமைப்பு மூலமாக இந்த மருத்துவமனை தொடர்ந்து பரிந்துரை செய்யப்படுவதாகவும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட Broken Hill பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே மருத்துவமனையின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை தந்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து கொள்வதாகவும் ராயல் அடிலைட் மருத்துவமனை தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

Prolonged problem in getting hospital space for Corona patients. Royal Adelaide Hospital announces acceptance of more Covid patients,.Broken Hill-ல் இருந்து பெரும்பாலான நோயாளிகள் ராயல் அடிலைட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அது மிகவும் அருகில் உள்ள காரணத்தாலும் நிர்வாக மேலாண்மைக்காகவும் ஏராளமான தொற்று பாதித்தோர் அங்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ஆஸ்திரேலியா Broken Hill உடனான பயண கட்டுப்பாட்டை நீக்கியதை தொடர்ந்து தற்போது இது போன்ற மருத்துவ தேவைகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Prolonged problem in getting hospital space for Corona patients. Royal Adelaide Hospital announces acceptance of more Covid patients..மேற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒட்டியுள்ள சில பகுதிகளில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் நாளொன்றுக்கு 50 முதல் 100 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அங்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அருகிலுள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Link Source: https://ab.co/2WtgEPv