Breaking News

ஆஸ்திரேலிய மத்திய பிராந்திய பகுதியில் புதிதாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Department of Health says 13 new cases of coronavirus have been diagnosed in Australia's central region.

கான்பெராவில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய மத்திய பிராந்திய முதல்வர் ஆண்டிரூவ் பார், கடந்த 24 மணி நேரத்தில் 13 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்தார்.

ஏற்கனவே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுடனான தொடர்பறிதல் நடவடிக்கையின் போது இவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஆண்ட்ரூ பார் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 8 பேர் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், 5 பேரும் இப்போது தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மத்திய பகுதியில் இதுவரை 250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 2 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவுறும் நிலையில், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும் என்று முதல்வர் பார் தெரிவித்துள்ளார்.

Department of Health says 13 new cases of coronavirus have been diagnosed in Australia's central regionதொற்று பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலிய மத்திய பிராந்திய சரியான திசையில் பயனிப்பதாகவும், தங்கள் மக்கள் தொகையில் 64% பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 40% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கள் பகுதியில் 95% மக்களும் தடுப்பூசி செலுத்தும் வகையில், இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை மாகாணமான நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1218 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கும் முதல்வர் ஆண்ட்ரூ பார், பகுதிவாரியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் முதல்வர் பார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி, கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று நம்பினாலும், ஒவ்வொரு ஆண்டும் பூஸ்டர் ஷாட் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் முதல்வர் ஆண்ட்ரூ பார் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3h2S6V9