Breaking News

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தீவிரவாத நடவடிக்கையை ஊக்குவித்ததாக இருவர் கைது : சர்ச்சைக்குரிய பெருந்தொற்று சட்டத்தை ஆதரிக்கும் எம்.பிக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Two arrested for inciting militancy in Melbourne, Australia

மெல்போர்ன் நகரில் சர்ச்சைக்குரிய பெருந்தொற்று கால அவசர சட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் அந்த அவசரச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டுவதற்கு காரணமாக இருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு மத்தியில் ஊடுருவி வெடிபொருட்களை வெடிக்க முயற்சித்ததாக Imre Pelyva மற்றும் Kenneth Reinhold Panten ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை Dandenong நீதிமன்றத்தில் அடுத்த வாரம் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Reinhold Panten என்ற 22 வயது நபர் போராட்டத்திற்கு இடையே குழந்தைகளை வன்கொடுமை செய்யும் பொருட்களை போராட்டக் களத்தில் விநியோகித்த தாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரையும் அடுத்த வாரம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் Dandenong ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பெருந்தொற்று சட்டங்களுக்கு எதிராக பாராளுமன்ற வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இடையில் ஊடுருவி இது போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட முயன்றதாக காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் உயர்மட்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்த நபர்களோடு இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3cz9zS5