Breaking News

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு

Last year's protest in the United States. Court orders release of young man accused of killing two.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இனவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது இளைஞர் ஒருவரால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் Kenosha பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞர் Kyle Rittenhouse தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக நீதிமன்றம் அவரை வழக்குகளில் இருந்து விடுவித்தது.

Last year's protest in the United States. Court orders release of young man accused of killing two..நீதிமன்றம் இளைஞரை விடுவித்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்ட்லேண்ட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர்கள் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி தொடங்கிய நிலையில் காரேஜுக்குள் அவர்கள் முடங்கிக் கொண்டனர். நியூயார்க்கை சேர்ந்த இடதுசாரிகள் இந்த தீர்ப்புக்கு எதிராக பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு, இனவெறிக்கு எதிராக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது இளைஞர் Kyle Rittenhouse,
AR – 15 தானியங்கி துப்பாக்கியால் தன்னுடைய பாதுகாப்புக்காக இருவரை சுட்டுக் கொன்றதாகவும், இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last year's protest in the United States. Court orders release of young man accused of killing two.,.Kenosha County நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் Kyle Rittenhouse குற்றமற்றவர் என்றும் அவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தற்காப்புக்காக மானது மட்டுமே என்றும் நீதிபதி Bruce Schroeder தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்படும் போது தீர்ப்புக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் மாறாக வன்முறையில் ஈடுபட்ட இளைஞரை நீதிமன்றம் விடுவித்து அதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் இந்த தீர்ப்பை பொருத்தவரை இது யாருக்கும் வெற்றி என்பது அல்ல என்றும் இரண்டு பேர் வாழ்க்கையை இழந்த நிலையில் பல கட்ட சூழலுக்கு பிறகு இந்த நிலையை எட்டி இருப்பதாக Kyle Rittenhouse குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இதில் தான் நீதிபதியின் கருத்து பக்கம் நிற்பதாகவும், நீதிமன்றம் சொல்வதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் எந்தவிதமான தயக்கமும் இன்றி ஆயுதம் ஏந்தும் கலாச்சாரத்தை நம்முடைய நீதி அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது என்றும் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இந்த தீர்ப்பு தொடர்பாக கருப்பின மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் மூலமாக இந்த தீர்ப்புக்கு எதிரான கருத்தை பதிவு செய்து வருகின்றனர். வன்முறை நேரங்களில் தெருவில் மனிதர்களை சுட்டுக் கொள்வதை நியாயப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பதாக உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3x83fe0