Breaking News

நியூசிலாந்திற்கு சுனாமி மற்றும் பூகம்பம் எச்சரிக்கை..மக்கள் தவிப்பு !

newzealand

அவசரநிலை மேலாண்மை அமைச்சர் Kiri Allan வரும் நாட்களில் சுனாமி பற்றிய எச்சரிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என்றார். வடக்குத் தீவில் உள்ள மக்கள் ஒரு பெரிய தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் அங்கிருந்து தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறினர்.

Kiri Allan about tsunamiGisborne வடகிழக்கில் Kermadec தீவில் 178 கி.மீ வேகத்தில் அதிகாலை 2.27 க்கு 7.3 அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. பிறகு காலை 6.40 மணி 7.4 அளவிலும், 8.28 மணிக்கு மிகப்பெரிய அளவில் 8.1 ஏற்பட்டது.

இந்த எச்சரிக்கை குறித்து அமைச்சர் Allan கூறுகையில், பல ஆயிரம் மக்களை அவர்களுடைய வீட்டை விட்டு முன்னெச்சரிக்கையாக வெளியேற கூறினார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாலை 3.45 வரை நீடித்தது. இந்த சோதனையடுத்து சில நாட்களுக்கு நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

போதுமான நபர்களுக்கு இந்த செய்தி சென்றடைந்ததா? என்பது தெரியவில்லை. மக்கள் எப்போதும் வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறினார். சுனாமி என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டதாகவும், அதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

சிறிய அலைகள் தான் பேரழிவை தரும் சுனாமியாக மாறுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி விஞ்ஞானி Emily Lane இந்த அலை பேரலையாக உருமாற நேரம் ஆகும். அங்கிருந்து வெளியேறியவர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாது என்றார்.Tokomaru Bayல் உள்ள New zealand வசிப்பவர்கள் அந்த அச்சுறுத்தும் சுனாமி கடற்கரையை நோக்கி வருவதை கண்டு அச்சமடைந்தனர். அனைவரும் மலையின் உச்சியில் ஒதுக்க இடமில்லாமல் தவித்தனர்.

காலை நியூசிலாந்தில் ஏற்பட்ட சுனாமியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் territory-ல் Norfolk தீவின் கடற்கரையை 64 கி.மீ. வேகத்தில் தாக்கியுள்ளது. மேலும் சுனாமி அலைகள் எழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் மற்றும் அவசர நிலை சேவைகள் கூறுவதை மக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரமான ராட்சச அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வெளியேறுபவர்கள் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு நகரவும்அறிவித்துள்ளது.