Breaking News

மாசு உமிழ்வு விதி மீறலில் ஈடுபட்ட டொயோட்டா நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

ஹைலக்ஸ், பிராடோ மற்றும் ஃபாச்சூனர் மாடல் டொயோட்டா கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இழப்பீடு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Toyota company violates emissions rules - Jackpot hits customers

ஆஸ்திரேலியாவில் டொயோட்டா நிறுவனத்துக்கு பெரிய வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. நடுத்தர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை பலரும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்யும் கார்களை விரும்பி வாங்குகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் அக்டோபர் 2021-ம் ஆண்டு வரை டொயோட்டாவின் ஹைலக்ஸ், பிராடோ மற்றும் ஃபார்ச்சூனர் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். குறிப்பிட்ட மாடல்களின் டீசல் ஆற்றல் கொண்ட கார்களில் உற்பத்தி குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

Toyota company violates emissions rules - Jackpot hits customers.கார்களில் பொருத்தப்பட்டுள்ள டீசல் அரிப்புகளால் எரிவாயு அதிகளவில் தேவைப்படுவது தெரியவந்தது. இதனால் மாசு உமிழ்வு அதிகமாகி, எஞ்சின்கள் செயல்படாமல் போயின. குறிப்பிட்ட காலவரையில் விற்கப்பட்ட 17.5 சதவீத வாகனங்களில் இந்த பிரச்னை இருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. டொயோட்டா ஆஸ்திரேலியாவின் மாசு உமிழ்வு விதிகளில் முறைகேடு செய்து கார்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. சுமார் 260000 கார்களில் இந்த பிரச்னை இடம்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டொயோட்டா நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை அளிப்பதாக உறுதி அளித்தது. இதையடுத்து ஒவ்வொரு வாகன உரிமையாளரும் 10500 டாலர்கள் இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.