Breaking News

அடிலேய்டு பாதுகாப்பு பணிகளுக்காக தெற்கு ஆஸ்திரேலியா புதிய நடவடிக்கை

பாதுகாப்புக்காக சோதனை அடிப்படையில் சி.சி.டி.வி கேமராக்களை மேற்படுத்த அடிலேய்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

South Australia new move for Adelaide security missions

அடிலேய்டு மாவட்டத்தில் முகங்களை அடையாளம் காணும் புதிய சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது. இதற்காக 3 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கேமராக்கள் 360 டிகிரி சுழலும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

South Australia new move for Adelaide security missions.இதன்மூலம் முகங்களை ஆடையாளம் காணுதல், வாகன எண்களை கண்டறிதல் போன்றவற்றை செய்ய முடியும். தற்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அதை தெற்கு ஆஸ்திரேலியா மாநில காவல்துறை கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய துணை மேயர் அர்மன் அப்ராஹிம்சாத், பொதுமக்கள் பாதுகாப்பை கருதியே இதுபோன்ற கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சட்ட பிரச்னைகள் இருந்தாலும், அது சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இந்த திட்டங்கள் பொருந்தாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கை கருதி எடுக்கப்படும் இதுபோன்ற பணிகள், பொதுமக்களின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளது.