Breaking News

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 : ஒலிம்பிக் கிராமத்தில் 2 விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Tokyo Olympics 2021. Corona vulnerability confirmed for 2 athletes in Olympic Village

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில், போட்டி நடைபெற உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் சனிக்கிழமையன்று ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஞாயிறன்று மேலும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே ஆஸ்திரேலியாவில் இருந்து சென்ற விளையாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tokyo Olympics 2021. Corona vulnerability confirmed for 2 athletes in Olympic Village.ஒலிம்பிக் கிராமத்தில் பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர்களோடு 155 பேர் தொடர்பில் இருந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் டோக்கியோ ஒலிம்பிக் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் பயிற்சிக்கு வந்து சென்றவர்கள் மற்றும் அதிகாரிகள் இல்லாத பட்டியலாகும்.

Tokyo Olympics 2021. Corona vulnerability confirmed for 2 athletes in Olympic Village,ஓகே ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களில் 11 ஆயிரம் பேர் வீரர், வீராங்கனைகள் மற்றும் அலுவலர்கள் ஆவர். இதனிடையே டோக்கியோவில் நாளொன்றுக்கு ஆயிரத்து 410 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 6 மாதங்களில் இல்லாத உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்திற்கு சென்று உள்ள வீரர் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் தங்களை உடனடியாக தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3eA0hH1