Breaking News

டோக்கியோவில் நடைபெறும் 2032 கோடைக் கால ஒலிம்பிக் போட்டிக்கான ஏலம் : பிரிஸ்பேனில் நடத்தக் கோரி ஏலத்தில் பங்கேற்கிறார் குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Annastacia Palaszczuk

Auction for the 2032 Summer Olympics in Tokyo, Queensland Premier Annastacia Palaszczuk bids for auction in Brisbane

2021 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு 2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Annastacia Palaszczuk டோக்கியோ சென்றுள்ளார். பிரிஸ்பேனில் 2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்பதற்காக பிரிஸ்பேன் லார்ட் Mayor Adrian Schrinner, விளையாட்டுத்துறை அமைச்சர் Richard Colbeck, ஒலிம்பிக் கமிட்டி தலைவர் John Coates உள்ளிட்டோரும் டோக்கியோ சென்றுள்ளனர்.

Auction for the 2032 Summer Olympics in Tokyo, Queensland Premier Annastacia Palaszczuk bids for auction in Brisbane.புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த சூழலில் குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Annastacia Palaszczuk டோக்கியோ செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வாயிலாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். ஜப்பான் சென்று வந்த பின்னர் தான் ஓட்டலில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ப்ரீமியர் Annastacia Palaszczuk கூறியுள்ளார்.

புதன்கிழமை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க ப்ரீமியர் ஜப்பான் செல்லும் நிலையில் துணை ப்ரீமியர் Steven Miles தற்காலிக ப்ரீமியராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே குயின்ஸ்லாந்து பிரீமியர் தற்போது ஜப்பான் செல்வது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. ஏற்கனவே 34 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளிலிருந்து சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில் ப்ரீமியரின் இப்போதைய இந்த பயணம் தேவையற்றது என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரிமீயர் அட் ஜப்பானில் இருந்து திரும்பிய பிறகு அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படும் அதற்கான கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Auction for the 2032 Summer Olympics in Tokyo, Queensland Premier Annastacia Palaszczuk bids for auction in Brisbane,.பிரிஸ்பேன் கோடைக்கால ஒலிம்பிக் தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்ற குயின்ஸ்லாந்து ப்ரீமியர், 2032 பிரிஸ்பேனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றால் அது மிகப்பெரிய தொழிலாளர் சந்தையை உருவாக்கும் என்று கூறியுள்ளார். பிரிஸ்பேன் ஒலிம்பிக்14 மில்லியன் டாலர் அளவுக்கு மதிப்புடையது என்றும், அதன் மூலமாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் ப்ரீமியர் Annastacia Palaszczuk நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1956 மெல்போர்ன், 2000 – சிட்னி ஒலிம்பிக் போட்டிகளை அடுத்து பிரிஸ்பேனில் 2032 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்பது புதன்கிழமை நடைபெறும் ஏலத்தில் முடிவாகும். குயின்ஸ்லாந்து ப்ரீமியரின் ஜப்பான் வருகை சர்ச்சைக்குரியதாக மாறி உள்ள நிலையில் ஒலிம்பிக் குழு தலைவர் Annastacia Palaszczuk ஏலத்தில் பங்கேற்பதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/36NgVi2