Breaking News

மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததில் 30 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிர்யிழந்தனர்.

At least 30 people have been died in a landslide in Mumbai after a house and perimeter wall collapsed due to heavy rains.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரயில் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டன.

At least 30 people have been died in a landslide in Mumbai after a house and perimeter wall collapsed due to heavy rains,.மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை செம்பூர் மகுல் பகுதியில் உள்ள பாரதி நகரில் சுற்றுச்சுவர் ஒன்று மண் சரிவால் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த சில வீடுகள் இடிந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டது. இதில் 19 பேர் இறந்தனர். காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல், விக்ரோலி புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மண்சரிவால் 6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் இறந்தனர். காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாண்டூப்பில் உள்ள வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் இறந்தார்.

At least 30 people have been died in a landslide in Mumbai after a house and perimeter wall collapsed due to heavy rainsஇறந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுபோல், விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக மோடி அறிவித்துள்ளார்.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஆதித்யா தாக்ரே, இயற்கை பேரிடர்களை தடுப்பது கடினம் என்றாலும், அதில் இருந்து மக்களை காக்க கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3wQBkgX