Breaking News

ஷின்சே அபே படுகொலைக்கு இதுதான் காரணம்..!!

ஷின்சோ அபேவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்ததை ஜப்பான் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

This is the reason for the assassination of Shinzo Abe

ஜப்பானில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு முன்னாள் பிரதமர் ஷின்சே அபே, நேற்று நாரா என்கிற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். மக்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்த அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்த கொன்றதாக கூறி 41 வயதான மதிக்கத்தக்க நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஷின்சே அபே பேசுகையில், அவரை குறிவைத்து சுடப்பட்ட தோட்டக்கள் தவறிப் பாய்ந்தன. பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிப்பதற்குள், இரண்டாவது குண்டு சுடப்பட்டு அது அபே மீது பாய்ந்தது.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பானின் நீண்ட காலமாக இருந்த 67 வயதான ஷின்சே அபே, அந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். அப்படிப்பட்ட தலைவரின் பாதுகாப்பு எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதன்மூலம் ஷின்சே அபேவின் பாதுகாப்பு கட்டமைப்பில் குறைபாடு இருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஜப்பானின் முக்கியத்துவம் பெற்ற தலைவரின் பாதுகாப்பில் இருந்த குறைபாட்டை உறுதி செய்ய தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னர் அதிகாரிகள் உண்மையை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாரா பகுதிக்கான பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வந்த தலைமை காவலர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கடந்த 1995-ம் ஆண்டு துவங்கிய 27 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். இப்படிப்பட்ட சம்பவம் நான் பொறுப்பில் இருந்த போது நடந்தது மிகவும் வேதனையை தருகிறது. ஷின்சோ அபேவின் படுகொலை தொடர்பாக, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.