Breaking News

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு அனுமதி – அதிபர் ஜோ பைடன் நிர்வாக ஆணை

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Abortion legalized in the US - President Joe Biden's executive order

அமெரிக்காவில் கடந்த 50 அண்டுகளாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமைச் சட்டம் அமலில் இருந்தது. இந்த சட்டத்தை சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தற்போது பெண்கள் பலர் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். உச்சநீதிமன்ற ஆணை வெளியான போது, அதற்கு நேரடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார் அதிபர் ஜோ பைடன்.

Abortion legalized in the US - President Joe Biden's executive order.இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிர்வாக ஆணையில் அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது கருக்கலைப்பு செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் அபராதங்களை தடுக்கும் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், கருக்கலைப்பு செய்வதற்கான தடை உத்தரவு நடைமுறையிலுள்ள மாநிலங்களில் அதிபரின் இந்த நிர்வாக ஆணை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அதற்குரிய தடையை பாராளுமன்றம் மூலம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.