Breaking News

தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இருந்து 28 ஆயிரம் பேரின் தகவல்கள் திருட்டு : தனியார் ஆலோசனை மையத்தில் இருந்த திருடப்பட்ட தகவல்கள் இதுவரை தவறாக பயன்படுத்தவில்லை என விளக்கம்

Theft of information from 28,000 people at the South Australian Ambulance Service Center. Explained that the stolen information at the private counseling center has not yet been misused

தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை அதன் நோயாளிகள் 28 ஆயிரம் பேரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2000 – 2003 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 32 ஆயிரம் நோயாளிகளின் தரவுகளில் 28,000 பேரின் தரவுகள் ஈடுபட்டிருப்பதாகவும், இது தனியார் ஆலோசனை மையத்தோடு இணைக்கப் பட்டிருந்த நிலையில் அந்த மையத்தில் இருந்து களவு போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த தரப்புகளில் நோயாளிகளின் பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Theft of information from 28,000 people at the South Australian Ambulance Service Center. Explained that the stolen information at the private counseling center has not yet been misused.மேலும் குறிப்பிட்ட சில நோயாளிகளின் தரவுகளில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகள் குறித்த விவரங்களும் அடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தரவுகள் அனைத்தும் தனியார் ஆலோசனை மையத்தின் சேமிப்புக்கருவிகளில் இருந்து திருடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யார் மீதும் குற்றச்சாட்டு எழாத நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தரவுத் திருட்டு சம்பவத்தில் தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை மையம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

எதிர்பாராத விதமாக திருடப்பட்ட தரவுகளை மீட்டெடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அது சாத்தியமில்லாத நிலையில் இருப்பதாகவும் தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை கூறியுள்ளது.

தரவுகள் திருடப்பட்ட பின்பு அது எந்தவிதமான முறைகேடு செயல்களிலும் பயன்படுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை மையம் தெரிவித்துள்ளது.

தரவு திருட்டு தொடர்பாக ஆஸ்திரேலிய தகவல் மையத்தின் ஆணையர் அலுவலகம் மற்றும் ஆஸ்திரேலிய தனியுரிமை கமிட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/disvI