Breaking News

தெற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் தலைவரின் உரையாடல்களை பதிவு செய்து மிரட்டிய விவகாரம் : முன்னாள் எம்.பி மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்

Intimidation of South Australian labor leader's conversations. Documents filed in court over allegations against former MP and her husband..

ALP மாகாண தலைமையகத்தில் தெற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் தலைவர் Peter Malinauskas இடம் வயர்களை பயன்படுத்தி அவரது உரையாடல்களை ரகசியமாக பதிவுசெய்து அவரிடம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்பி Annabel Digance அவரது கணவர் Greg ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அடிலெய்ட் நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Intimidation of South Australian labor leader's conversations.பாராளுமன்ற விசாரணை நடைபெறும்போது தன் மீதான வழக்குகளை விசாரிக்க கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் எம்பி Annabel Digance கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு Peter Malinauskas மறுப்பு தெரிவித்ததன் அடிப்படையில் Annabel அவரது கணவர் Greg இணைந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வெறும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே முன்னாள் எம்பியும் அவரது கணவரும் தொழிலாளர் தலைவரிடம் மிரட்டல் விடுத்ததாகவும், இதில் கிரிமினல் உள்நோக்கங்கள் எதுவும் இல்லை என்றும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் எம்பி Annabel Digance -ன் வழக்கறிஞர் Angela Pierce நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு உரையாடல்களிலும் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்றும் ஒன்று காவல்துறையுடன் நடத்தப்பட்ட உரையாடல் என்றும், மற்றொன்று வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இடமே நடத்தப்பட்ட உரையாடல் என்றும் இதில் எந்தவிதமான குற்றங்களும் கண்டறிய முடியாத வகையில் இந்த வழக்கு இருப்பதாகவும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து முன்னாள் எம்பி அவரது கணவரை நீதிமன்றம் விடுவிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் Angela Pierce வாதாடினார்.

Intimidation of South Australian labor leader's conversationsஎதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு தொழிலாளர் தலைவர் Malinauskas-க்கும் அவரது கட்சியை சார்ந்தவர்களுக்கும் இது போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் முன்னாள் எம்பியும் அவரது கணவரும் நடந்துகொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது என்றும் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் முன்னாள் எம்பி Annabel Digance மற்றும் அவரது கணவர் Greg கைது செய்யப்பட்ட போது காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், 13 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் கைது நடவடிக்கையின்போது Annabel இடம் தவறாக நடந்து கொள்ளும் வகையில் செயல்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மேலும் இதற்கு காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Link Source: https://ab.co/3HoODvF